ஹோம் /கோயம்புத்தூர் /

வால்பாறைக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - கவனம்... யானை இருக்கு இந்த சாலையில் போக முடியாது!

வால்பாறைக்கு சுற்றுலா செல்ல திட்டமா? - கவனம்... யானை இருக்கு இந்த சாலையில் போக முடியாது!

வால்பாறை

வால்பாறை

Coimbatore District | கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள முக்கிய சாலையில் யானை வாகனங்களை வழிமறித்து துரத்திச் செல்வதால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை எவ்வளவு காலம் இருக்கும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாவட்டம் வால்பாறை பசுமையும், இயற்கை அழகும், அருவிகளும், நீர்த்தேக்கமும், வளைந்து செல்லும் அழகான பாதைகளும் நிறைந்த பகுதி. இதனால் சுற்றுலா பயணிகள் விரும்பி செல்லும் இடமாக இது திகழ்கிறது. இங்கிருந்து சாலக்குடி செல்லும் வழியில் இயற்கை அழகோடு சில்லென்று கொட்டும் அதிரப்பள்ளி அருவி உள்ளது. வால்பாறை பகுதிகளுக்கு சுற்றுலா செல்வோர் மளுக்கப்பாறை வழியாக அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு சென்று நீராடி மகிழ்வது வழக்கம்.

இந்நிலையில், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் சாலக்குடிக்கு வனப்பகுதி வழியாக செல்லும் இந்த சாலையில், மளுக்கப்பாறை அருகே கடந்த சில நாட்களாக ஒற்றை காட்டுயானை ஒன்று உலா வருகிறது. இந்த யானையானது, அந்த வழியாக செல்லும் வாகனங்களை துரத்திச் செல்கிறது.

இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அச்சம் அடைந்துள்ளனர். சாலக்குடியில் இருந்து வால்பாறை நோக்கி வந்த கேரள அரசு பேருந்தை அந்த யானையானது துரத்தியதால். சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு பேருந்தை, அதன் ஓட்டுனர் பின்னோக்கி செல்ல வேண்டிய செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

அதிரப்பள்ளி அருவி

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அந்த சாலையில் சுற்றுலா வாகனங்கள் ஏராளமான சென்று வரும் நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகளின் நலன் கருதி ஒரு வாரத்துக்கு கேரள அரசு போக்குவரத்துக்கழக பஸ் தவிர சுற்றுலா வாகனங்கள் உள்பட பிற வாகனங்கள் செல்ல கேரள வனத்துறையால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

யானை

Must Read :தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

மேலும் அங்கு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், அந்த யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிடவும் வனத்துறையினர் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Elephant, Local News, Tourist spots