ஹோம் /கோயம்புத்தூர் /

சோலையார் அணை முழு  கொள்ளவை எட்டியது - கோவை விவசாயிகள் மகிழ்ச்சி

சோலையார் அணை முழு  கொள்ளவை எட்டியது - கோவை விவசாயிகள் மகிழ்ச்சி

சோலையாறு அணை

சோலையாறு அணை

Asia's 2nd Deepest Dam Reaches Full Capacity | ஆசியாவின் இரண்டாவது  2வது அழமான அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால், மீண்டும் தொடர்ந்து அணையாக அதே அளவில் இருப்பதால், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் உள்ள ஆசியாவின் 2வது ஆழமான அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

சோலையார் அணை ஆசியாவின் இரண்டாவது ஆழமான அணை என்று கூறப்படுகிறது. இது பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் கீழ் வரும் ஒரு முதன்மையான நீர்த்தேக்கம் இதுவாகும்.

இதையும் படிங்க ; கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை - உடனே விண்ணப்பியுங்கள்.!

தமிழகம் மற்றும் கேரளத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கன மழை நீடித்து வருகிறது. இதனால் இங்குள்ள அணைகள் நீர்நிலைகள், நீர்தேக்கங்கள் உள்ளிட்டவைகளில் முழு கொள்ளவை எட்டியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டம் வால்பாறையில் கனமழை நீடிப்பதால், தொடர்ந்து சோலையாறு அணை கடந்த 63 நாட்களாக முழு கொள்ளளவை தாண்டிய நிலையில் இருந்து வருகிறது. சோலையாறு அணை வால்பாறை பகுதியில் கடந்த 15 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது.

இதன் காரணமாக சோலையாறு அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஏற்கனவே சோலையாறு அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 160 அடியாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால், எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு 63 நாட்களாக சோலையாறு அணையின் நீர்மட்டம் 161அடியை தாண்டிய நிலையிலேயே இருந்து வருகிறது.

இந்த மழை காரணமாக ஆறுகளில் மட்டுமல்லாமல் எஸ்டேட் பகுதியில் உள்ள ஓடைகளிலும் தண்ணீர் பாய்ந்து சென்று வருகிறது.சோலையாறு அணையின் நீர் பிடிப்பு பகுதிகள் கடல் போல் காட்சியளித்து வருகிறது. வெளியேற்றம் மேல்நீராரில் 72மி.மீ மழையும், சோலையாறு அணையில் 47மி.மீ.மழையும், கீழ் நீராரில் 63. மி.மீமழையும், வால்பாறையில் 42மி.மீ மழையும் பெய்துள்ளது. சோலையாறு அணைக்கு வினாடிக்கு 3ஆயிரத்து 787 கன அடித் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அணையிலிருந்து மின் நிலையம் -1 இயக்கப்பட்டு சேடல் பாதை வழியாக பரம்பிக்குளம் அணைக்கு 3 ஆயிரத்து 813 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது தொடர் கன மழை நீடிப்பதால் அணையின் நீர் மட்டம் 162.66 அடியாக இருந்து வருகிறது. மேலும் விட்டு விட்டு மழை பெய்தபோதும் அவ்வப்போது வெயில் வாட்டி வருவதால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து தேயிலை தோட்டங்களிலும் பச்சை தேயிலை இலைகள் துளிர் விட்டு வளர்ந்துள்ளது. இதனால் தேயிலை உற்பத்தி அதிகரித்துள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News