முகப்பு /கோயம்புத்தூர் /

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது.. மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி..

ஆன்லைன் மூலம் கற்றுத்தரப்படுகிறது.. மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி..

X
மாதிரி

மாதிரி படம்

Montessori Education : தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சிலின் கீழ் பெண்களுக்கு மாண்டசோரி கல்வி (Montessori education) ஆன்லைன் மூலமாக கற்றுத்தரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

ஆன்லைன் மூலம் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவதாக கோவையில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோயம்புத்தூரில் தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தி கூறியதாவது, “இந்தியாவின் முன்னணி குழந்தைகள் நல அமைப்பான தேசிய குழந்தைகள் மேம்பாட்டு கவுன்சில் புதிய ஆன்லைன் வகுப்புகளை துவங்கியுள்ளது. இதில் மாண்டிசோரி கல்வி முறை குறித்து பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் கல்வியை எளிய முறையில் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தல், உபகரணங்களை பயன்படுத்தி குழந்தைகளுக்கு கல்வி பயிற்றுவித்தல் உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகிறது. 10ம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு என வெவ்வேறு வகையில் பயிற்சி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பயிற்சியும் ஒருவருட காலத்திற்கு நடைபெறும்.

10ம் வகுப்பு படித்தவர்களுக்கு சான்றிதழ் படிப்பும், சர்வதேச மாண்டிசோரி கல்வியில் (Montessori education) டிப்ளமோ பயில்வதற்கு பிளஸ் டூ தேர்வு பெற்றிருக்க வேண்டும். சர்வதேச மாண்டிசோரி கல்வியில் முதுகலை டிப்ளமோ படிக்க ஏதேனும் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தினமும் இணையம் மூலமாக இந்த வகுப்புகள் நடைபெறுகின்றன. இதுகுறித்து விவரங்களுக்கு https://ncdconline.org/ என்ற இணையத்தை பார்வையிடலாம். அல்லது 9288026146 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்” இவ்வாறு ஆனந்தி கூறினார்.

First published:

Tags: Coimbatore, Education, Local News