முகப்பு /கோயம்புத்தூர் /

கோவையைச் சேர்ந்த சாதனை கலைஞர்களுக்கு அரசு விருது : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

கோவையைச் சேர்ந்த சாதனை கலைஞர்களுக்கு அரசு விருது : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

சாதனை கலைஞர்களுக்கு விருது

சாதனை கலைஞர்களுக்கு விருது

மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டுதோறும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்தவர்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டுதோறும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் இசை நாட்டியம், ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நாடகம், கருவியிசையில் சாதனை படைத்த கலைஞர்களில் 18 வயது அதற்குட்பட்டோருக்கு 'கலை இளமணி’ விருதும், 19 வயது முதல் 35 வயது பிரிவினர்க்கு 'கலை வளர்மணி’ விருதும், 36 வயது முதல் 50 வயது பிரிவினர்க்கு 'கலை சுடர்மணி’ விருதும், 51 வயது முதல் 65 வயது பிரிவினர்க்கு 'கலை நன்மணி' விருதும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினர்க்கு 'கலை முதுமணி' விருதும் வயதுக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட உள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கோயம்புத்தூர் மாவட்ட கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவரகுறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோயம்புத்தூர்-641050 என்ற முகவரிக்கு வரும் மே மாதம் 2ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் 0422 2610290 அல்லது 9442213884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

top videos

    என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    First published:

    Tags: Coimbatore, Local News