முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை - உடனே விண்ணப்பியுங்கள்.!

கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை - உடனே விண்ணப்பியுங்கள்.!

கோவை

கோவை

Apply Now For Educational Assistance For Children of Handloom Weavers | கைத்தறி  நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ் சமீரன்  தெரிவித்துள்ளார். 

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதற்கு தகுதியுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கோவை மாவட்ட கலெக்டர் ஜி. எஸ் சமீரன் தெரிவித்துள்ளார்.

கைத்தறி நெசவாளர்களுக்கு சிறந்த சேவை வழங்கவும், நெசவாளர்களின் குறைகளான வேலைவாய்ப்பு, கூலி உயா்வு கைத்தறி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களில் நெசவாளர்களை சேர்க்கவும், மேம்படுத்தவும், நெசவாளா்கள் நேரடியாக தங்களின் குறைகளை தெரிவிக்கும் வகையில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க ; கோவை மாநகருக்கு எப்படி காவல் தெய்வமாக மாறினார் கோனியம்மன்

கைத்தறி நெசவாளர்களின் வாழ்கையை உயர்த்தும் வகையில், மானியங்களும் வழங்கப்படுகிறது. மேலும், அவர்களின் வாழ்கையை மேம்படுத்தும் வகையில், இலவச மின்சாரம், குழந்தைகளுக்கு கல்வி, ஈமை சடங்களுக்கு நிதி உதவி, வீடு கட்ட நிதி உதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நெசவாளர்களுக்கு அரசு சார்பில் பல்வேறு வகையில் உதவிகளும் வழங்கப்படுகிறது. அண்மையில் தமிழகத்தில் குறைகளை போக்கும் வகையில் தொலைபேசி சேவை மைய எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.

கைத்தறி நெசவாளா்களின் குழந்தை களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை பெற தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பா க அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மத்திய அரசின் தேசிய கைத்தறி வளா்ச்சி திட்ட வழிகாட்டுதல்படி கைத்தறி நெசவாளர், கைத்தறி நெசவு சாா்ந் த உபதொழில்களில் ஈடுபடும் நெசவாளா்களின் குழந்தைகளுக்கு (இரண்டு குழந்தை கள் வரை) மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அல்லது உதவி தொகை பெறும் துணிநூல் கல்வி நிறுவனங்களில் டெக்ஸ்டைல்ஸ் தொடர்பான பட்டய படிப்புகள், இளநிலை, முதுநிலை பட்ட படிப்புகள் படிக்கும் மாணவா்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

கல்வி நிலையங்களில் செலுத்தும் கல்வி கட்டணம் மாதம் ரூ.5 ஆயிரம் அல்லது ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை இதில் எது குறைவோ அதன் அடிப்படையில் கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இத்திட்ட ம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு சேலம், தில்லை நகரிலுள்ள நெசவாளா் சேவை மையத்தை அணுகலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News