ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு - 233 பணியிடங்கள்... நேரடி நியமனம் எக்ஸாம் எதுவும் இல்லை!

கோவை மாவட்ட ரேஷன் கடைகளில் வேலை வாய்ப்பு - 233 பணியிடங்கள்... நேரடி நியமனம் எக்ஸாம் எதுவும் இல்லை!

ரேஷன் கடை

ரேஷன் கடை

Ration Shop Recruitment : ரேஷன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

ரேஷன் கடையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக கோவை மண்டல கூட்டுறவு சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள அறிவிப்பில், கோவை மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் ரேஷன் கடைகளில் உத்தேசமாக காலியாக உள்ள 233 விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https://www.drbcbe.in/ என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14ஆம் தேதி மாலை 5.45 மணிவரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதாரர்களுக்கான அறிவுரைகள் மற்றும் இந்த பணிக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வயதுவரம்பு, இடஒதுக்கீடு, விண்ணப்பக்கட்டணம் மற்றும் விண்ணப்பித்தல் தொடர்பான விவரங்கள் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (www.drbcbe.net) வெளியிடப்பட்டுள்ளன.

அதன், விரிவான அறிவிக்கை மற்றும் விண்ணப்பதாரர்களு க்கான அறிவுரைகளை கவனத்தில் கொண்டு விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும் விற்பனையாளர் பணியிடத்திற்காக இணைய தளத்தில் எளிமையாக விண்ணப்பிப்பது தொடர்பாக.

Must Read : அடடே... வடிவேலு படத்தின் நகைச்சுவை காட்சிகள் இங்குதான் எடுக்கப்பட்டதா! - விழுப்புரம் ஷூட்டிங் ஸ்பாட்

https://www.youtube.com/watch?v=aCFm0zOIgi0 என்ற வளையொளி (youtube Channcl - TNCOOP DEPT) தளத்தில் விரிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் முறைகுறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் kovaidccb@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவிமைய தொலைபேசி எண் 0422 2302447 வாயிலாகவும் கோவை மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விண்ணப்பதாரர்கள் மேற்காணும் வளையொளி (யூ-டியூப்) தளத்தினை பயன்படுத்தி நவம்பர் 14ஆம் தேதி விண்ணப்பித்து வேலை வாய்ப்பை பெற்று மகிழுங்கள்.

Published by:Suresh V
First published:

Tags: Government jobs, Local News, Ration card, Ration Shop