கோவை சுந்தராபுரம் - குனியமுத்துார் இடைப்பட்ட பகுதியில், சுகுணாபுரம் அருகே, மாநகராட்சியின் 97வது வார்டில் குறிச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது அரசு அடுக்குமாடி குடியிருப்பு.
மலையின் உச்சியில் கட்டப்பட்ட இந்த குடியிருப்பு பார்ப்பதற்கு பிரம்மாணடமாக காட்சியளிக்கிறது. சுமார் 3.5 ஏக்கர் நிலத்தில் கடந்த 2017ம் ஆண்டும் 15 கோடி ரூபாய் மதிப்பில் இந்த குடியிருப்பு கட்டப்பட்டது.
புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழைகளுக்காக தமிழக அரசு கட்டிய இந்த குடியிருப்பில் மொத்தம் 224 வீடுகள் உள்ளன. மொத்தம் 14 பிளாக்குகளில் இங்கு குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீடும் வரவேற்பறை, படுக்கை அறை, சமையல்அறை, பால்கனி, கழிப்பிடம் என 400 சதுரடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது. குடிநீர் மின் இணைப்பும் இந்த குடியிருப்புக்கு வழங்கப்பட்டுவிட்டது.
ஆனால், இந்த குடியிருப்பில் தற்போது வரை ஒரு குடும்பம் கூட குடியேறவில்லை. இந்த 224 வீடுகளும் திருநங்கைகளுக்கும், நலிந்த மக்களுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இங்கு பாதுகாப்பு குறைபாடுகள் அதிகமாக இருப்பதால் இதுவரை யாரும் இங்கு குடிபுகாமல் உள்ளனர்.
5 ஆண்டுகள் ஆகியும் பயன்பாடில்லாமல் இருக்கும் இந்த குடியிருப்பில் பல்வேறு சமூக விரோத செயல்கள் நடைபெறுகின்றன. 224 குடியிருப்புகளிலும் மது பாட்டிகள், சுவர்களில் அருவறுக்கத்தக்க படங்கள் வரையப்பட்டுள்ளன.
இரவு நேரங்களில் இங்கு விபச்சாரமும் தாராளமாக நடைபெறுவதாக சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஆள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் கட்டிடத்திற்கு வழங்கப்பட்ட மின் இணைப்பு வயர்கள், தண்ணீர் குழாய்கள், இரும்பு ஜன்னல்கள் என அனைத்தும் சூறையாடபட்டுள்ளது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
புதர் மண்டி கிடக்கும் இந்த குடியிருப்பை புணரமைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்பதே பயனாளிகளின் கோரிக்கையாக உள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News