Home /coimbatore /

எஸ்.சி, எஸ்.டி மக்கள் தாட்கோ மூலம் வங்கி கடன் பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு

எஸ்.சி, எஸ்.டி மக்கள் தாட்கோ மூலம் வங்கி கடன் பெற ஆண்டு வருமான வரம்பு உயர்வு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

18 முதல் 65 வயது வரை உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ திட்டத்தின் படி மானியத்துடன் கூடிய கடனுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பழங்குடியினர் ஆதிராவிடர்களுக்கு தாட்கோ சார்பில் வழங்கப்படும் மானியத்துடன் கூடிய வங்கி கடன் திட்டத்துக்கு ஆண்டு வருமான உச்ச வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.

    பொருளாதார மேம்பாட்டு திட்டத்துக்கு தாட்கோ சார்பில் பழங்குடியினர் ஆதிராவிடர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படுகிறது. இது 2 லட்ச ரூபாயாக இருக்கிறது.

    இந்த திட்டத்தின் கீழ் அதிகமான மக்கள் மானியத்துடன் வங்கிக் கடன் பெற்று பயனடைய வேண்டி ஆண்டு வருமான உச்ச வரம்பை 3 லட்ச ரூபாயாக உயா்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

    18 முதல் 65 வயது வரை உள்ள ஆதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ திட்டத்தின் படி மானியத்துடன் கூடிய கடனுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

    மேலும், இதில், தொழில் முனைவோர் திட்டம், இளைஞா்களுக்கான பொருளாதார மேம்பாட்டு திட்டம், மருத்துவம், அதை சாா்ந்த சிகிச்சை மையம், ஆதி திராவிடா், மகளிா் சுயஉதவி
    குழுக்களுக்கான திட்டங்களில் பயன் பெற முடியும்.

    மேலும், இது தொடர்பாக கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி