முகப்பு /கோயம்புத்தூர் /

அம்பேத்கர் பிறந்த நாள் விழா.. கோவையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

அம்பேத்கர் பிறந்த நாள் விழா.. கோவையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு..

கோவையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கோவையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

Ambedkar Birthday : அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. 

  • Last Updated :
  • Coimbatore, India

சமத்துவ நாளை முன்னிட்டு கோவையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் சமத்துவ நாள் உறுதி மொழி எடுத்து கொள்ளப்பட்டது.

அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைப்பிடிப்பதை முன்னிட்டு கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.  அம்பேத்கரின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அம்பேத்கர் பிறந்த தினத்தை சமத்துவ நாளாக கடைபிடிக்க அரசு தெரிவித்துள்ளது. அதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் இன்றைய தினம் சமத்துவ நாள் கடைபிடிக்கப்படுவதை முன்னிட்டு உறுதிமொழி எடுத்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் அரசு அலுவலர்கள், அரசு பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் உட்பட, தமிழ்நாடு விசாயிகள் சங்க தலைவர் சு.பழனிச்சாமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அம்பேத்கர் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

First published:

Tags: Coimbatore, Local News