ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி - ஆனால் ஒரு கண்டிஷன்

கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி - ஆனால் ஒரு கண்டிஷன்

கோவை

கோவை

Kovai Kutralam | கோயம்புத்தூரில் உள்ள முக்கிய சுற்றுலா தலமான கோவை குற்றாலம் அருவிக்குச் செல்ல, சுற்றுலா பயணிகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் சிறுவானி மலைத்தொடர்களில் உருவாகும்அழகிய அருவி கோவை குற்றாலம். இது கோயம்புத்தூரில் இருந்து 35 கி.மீ. தொலைவில், நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது. இந்த அருவி சிறுவானி அணைக்கு அருகில் அமைந்துள்ள இந்த இடம் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.

இதையும் படிங்க ; கோவை மாநகருக்கு எப்படி காவல் தெய்வமாக மாறினார் கோனியம்மன்

சுற்றுலா பயணிகள் மிகவும் விரும்பிச் செல்லும் இந்த கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, சுற்றுலா பயணிகளின் நலன் கருதி வனத்துறையினர் அனுமதி மறுப்பது வழக்கம்.

அதன்படி, அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த ஜூலை மாதம் முதல் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது மழைப்பொழிவு குறைந்துள்ளது.

இதனால், கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து குறைந்து சீராக கொட்டுகிறது. இதையடுத்து, சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

இதையும் படிங்க ; கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை - உடனே விண்ணப்பியுங்கள்.!

அனுமதிக்கப்படும் நேரம்:

அதன்படி, காலை, 10 மணி முதல் 11 மணி வரை; காலை 11:30 முதல் மதியம் 12:30 மணி வரை, மதியம், 1 முதல் 2 மணி வரை என நிபந்தனைகளுக்கு உட்பட்டு மூன்று அட்டவணைகளின்படி அனுமதி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் காலை 10 மணிக்கு அனுமதி சீட்டு பெற்று அருவிக்குச் செல்லும் சுற்றுலா பயணிகள் மதியம் 1 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சில்லென்று கொட்டும் கோவை குற்றாலம் அருவியில்குளிக்க அனுமதி அளிக்கப்பப்பட்டுள்ளால் சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News