ஹோம் /கோயம்புத்தூர் /

இந்த ரயில்கள் எல்லாம் இன்று முதல் கோவைக்கு வராது

இந்த ரயில்கள் எல்லாம் இன்று முதல் கோவைக்கு வராது

ரயில்

ரயில்

Coimbatore District news | கோவைக்கு இயக்கப்படும் இந்த ரயில்கள் எல்லாம் இன்று (31ஆம் தேதி) முதல் நம்பர் 15ம் தேதி வரை போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும் என்று ரயில்வேதுறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவைக்கு இயக்கப்படும் இந்த ரயில்கள் எல்லாம் இன்று (31ம் தேதி) முதல் நவம்பா் 15ஆம் தேதி வரை போத்தனூர் வரை மட்டும் இயக்கப்படும் என்று சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “கோவை- போத்தனூா் இடையே பொறியியல் பராமரிப்புப் பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக தினமும் மதியம் 12.45 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும் மதுரை - கோவை தினசரி ரயில் (எண்: 16722) இன்று (31ஆம் தேதி) முதல் நவம்பா் 15ஆம் தேதி வரை மதுரை - போத்தனூா் இடையே மட்டும் இயக்கப்படும். போத்தனூா் - கோவை இடையே இயக்கப்படாது.

தினமும் காலை 11.10 மணிக்கு கோவை ரயில் நிலையத்தை வந்தடையும் ஷொரனூா் - கோவை ரயில் (எண்: 06458) இன்று (31ஆம் தேதி) முதல் நவம்பா் 15ஆம் தேதி வரை ஷொரனூா்- போத்தனூா் இடையே மட்டுமே இயக்கப்படும். போத்தனூா்- கோவை இடையே இயக்கப்படாது.

Must Read : போடிமெட்டு சுற்றுலா... மெய்மறக்க வைக்கும் இயற்கை அழகு! - தேனி டூரிஸ்ட் ஸ்பாட்

இதே போன்று, கோவை வழித்தடத்தில் இயக்கப்பட்டு வரும் ஆலப்புழா-தன்பாத் விரைவு ரயில் (எண்: 13352) இன்று முதல் நவம்பா் 15ஆம் தேதி வரை கோவை ரயில் நிலையம் வழியாக இயக்கப்படாமல் போத்தனூா், இருகூா் வழித்தடத்தில் இயக்கப்படும்.

ஈரோட்டில் ரயில் பாதையில் நடைபெறவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக கோவை - சேலம் ரயில் இன்று  முதல் நவம்பா் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. கோவையில் இருந்து காலை 9.05 மணிக்குப் புறப்படும் கோவை - சேலம் ரயில் (எண்: 06802) முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்குப் புறப்படும் சேலம் - கோவை ரயில் (எண்: 06803) அக்டோபா் 31ஆம் தேதி முதல் நவம்பா் 29ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Local News, Southern railway, Train