ஆண்டுதோறும் ஜூன் மாதம் 14ம் தேதி உலக ரத்த தானம் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் ரத்த தானம் செய்வதன் அவசியம், ரத்தம் கிடைக்காமல் அவதிப்படும் மக்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல், கொடையாளர்கள் பலரும் இந்த நாளில் மருத்துவமனைகளுக்கு சென்று தங்கள் ரத்தத்தை தானமாக வழங்குவர்.
பொதுவாகவே தேவையைக் கணக்கிடும் போது, தானமாக கிடைக்கும் ரத்தம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இந்த சூழலில் கொரோனா தாக்கத்திற்கு பிறகு ரத்த தானம் கொடுக்க வருபவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் அவசர சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்படும் மக்கள் அவதியடைகின்றனர்.
கோவையை சேர்ந்த ‘உதிரம் கோபி’ என்பவர் தனது நண்பர்களைத் திரட்டி வாட்ஸ்-அப் குழு அமைத்து ரத்த தானம் செய்து வருகிறார். ரத்தம் தேவைப்படுவோருக்கு ஓடிச்சென்று உதவுகின்றது இந்த குழு.
கோவை சுற்றுவட்டாரப்பகுதி மக்களுக்கு ரத்தம் தேவைப்பட்டால் 9994148105 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைக்கலாம்.
‘உதிரம் கோபியின் 'மக்கள் சேவை குறித்தும் ரத்த தானம் குறித்தும் விரிவாக தெரிந்து கொள்வோம்..
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
உங்கள் நகரத்திலிருந்து(Coimbatore)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.