Home /coimbatore /

அழகில் அசத்தும் ஆழியாறு அணை... கோவையில் மிஸ் பண்ணக்கூடாத டூரிஸ்ட் ஸ்பாட்!

அழகில் அசத்தும் ஆழியாறு அணை... கோவையில் மிஸ் பண்ணக்கூடாத டூரிஸ்ட் ஸ்பாட்!

கோயம்புத்தூர் ஆழியாறு அணை

கோயம்புத்தூர் ஆழியாறு அணை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே மலைகளுக்கு இடையில் மனதை கொள்ளை கொள்ளும் அற்புத அழகுடன் காட்சியளிக்கிறது ஆழியாறு அணை.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Pollachi, India
    கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஆழியாறு அணை. சூரியவம்சம் படத்தில் சக்திவேலாக நடிக்கும் சரத்குமார், பேரனுடன் கொஞ்சிப் பேசி விளையாடும் இடம். அமைதிப்படை படத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் இடம். காதலிக்க நேரமில்லை படத்தில் ‘விஸ்வநாதன் வேலை வேண்டும்’ என்று ஆடிப்பாடும் இடம் இப்படி பல்வேறு திரைப்படங்கள் படம் பிடிக்கப்பட்ட சூட்டிங் ஸ்பாட்தான் இந்த ஆழியாறு அணை.

    அழகிய இயற்கை காட்சிகள் கொண்ட, மலைகளால் சூழப்பட்டு மனம் மயக்கும் இடமாக அமைந்துள்ள ஆழியாறு அணை, பொள்ளாச்சி மற்றும் வால்பாறைக்கு இடையே அமைந்துள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 64 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 24 கி.மீ தொலைவிலும், சென்னையில் இருந்து 545 கி.மீ தொலைவிலும் இருக்கிறது.

    கோயம்புத்தூர் ஆழியாறு அணை


    கோயம்புத்தூரிலிருந்து 2 மணி நேர பயணத்தில் ஆழியாறை அடைய முடியும். மேகங்கள் வருடி, முத்தமிட்டு செல்லும் மேற்கு தொடர்ச்சி மலையின் வால்பாறைக்கு அடிவாரத்தில் அமைந்துள்ளது இந்த ஆழியாறு அணை.

    கோயம்புத்தூர் ஆழியாறு அணை


    இந்த அணையின் அழகு, உல்லாசப் படகுப் பயணம், அணைக்கு அருகில் உள்ள பார்க், அணையை சூழ்ந்து இதயத்தை இதமாக்கும் மலைகள், அதில் கொஞ்சி விளையாடும் மேகங்கள், அணையின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் வியூவ்ஸ், அருகில் இருக்கும் அருவி என அங்கே கண்டு களித்து, மகிழ ஒருநாள் வேண்டும். ஆழியாறு அணையை சுற்றியுள்ள மலைகள் கண்களுக்கு விருந்து படைப்பதாக ரம்மியமாக காட்சியளிக்கின்றன. அணையில் பாதுகாப்பாக படகு சவாரி செய்யும் வசதியும் இருக்கிறது. மீன் காட்சியகமும் உள்ளது.

    ஆழியாறு அணை


    இந்த ஆழியாறு அணைக்கு பரம்பிக்குளம் அணையிலிருந்து கால்வாய் மூலமாக தண்ணீர் வரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட இந்த அணையானது 1962-ம் ஆண்டு அப்போதைய தமிழக முதலமைச்சர் காமராஜரால் திறந்துவைக்கப்பட்டது. பொள்ளாச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு பாசனத்திற்கு ஆதரமாகத் திகழும் இந்த அணையின் உயரம் 81 மீட்டர் ஆகும்.இதன் நீர் தேக்க அளவு 3.25 டிஎம்சி. இந்த அணைக்கு அதிகபட்ச நீர்வரத்து ஆண்டின் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இருக்கும்.

    ஆழியாறில் இருந்து வால்பாறை போகும் வழியில் ஒரு கிலோ மீட்டர் தூரம் தள்ளி வந்தால், திருக்கோவில் நுழைவாயில் இருக்கும். அதற்கு எதிர்புரத்தில் இருந்து ஆழியாறு அணையின் அழகான ஓர் வீயூ பாயின்ட் இருக்கிறது. இந்த அணைக்கு செல்லும் வழியும், அங்கிருந்து வால்பாறை செல்லும் பாதையிலும் மெய் சிலிர்க்கும் பசுமையான காட்சிகளில் உங்களின் மனம் லயிக்கும் வகையில் காட்சியளிக்கும்.

    இந்த ஆழியாறு அணைக்கு அருகில்தான் குரங்கருவி என்று அழைக்கப்படும் கவியருவி உங்கள் உள்ளத்தை கொள்ளை கொண்டு, உடலை குளிர்விக்க காத்துக் கொண்டிருக்கிறது. இந்த அருவியும் சூட்டிங் ஸ்பாட் தான். ‘நெஞ்சுக்குள்ளே இன்னாருனு சொன்னால் தெரியுமா’ என்ற பாடலில், ‘காஞ்சி பட்டு ஒன்னு நான் கொடுக்பேனே’ என்று கார்த்திக் தண்ணீரில் நின்றவாறு தோன்றும் போது ஒரு பட்டுசேலை அருவியில் தவழ்ந்து வருமே அந்த இடம் இந்த குரங்கருவிதாங்க. இவற்றை எல்லாம் மிஸ் பண்ணாம பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Local News

    அடுத்த செய்தி