ஹோம் /கோயம்புத்தூர் /

துணிவு, வாரிசு பட கொண்டாட்டங்களில் இதை தவிர்த்திருக்கலாம்? கோவை மக்களின் பொதுவான கருத்து..

துணிவு, வாரிசு பட கொண்டாட்டங்களில் இதை தவிர்த்திருக்கலாம்? கோவை மக்களின் பொதுவான கருத்து..

X
வாரிசு,

வாரிசு, துணிவு

Thunivu vs Varisu : துணிவு, வாரிசு படங்கள் ரிலீசானபோது ரசிகர்கள் சிலவற்றை தவிர்த்திருக்கலாம் என கோயம்புத்தூர் மாவட்ட பொதுமக்களின் கருத்து.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

ரசிகர்களால் 'தல' என்று அழைக்கப்படும் நடிகர் அஜித்குமார் மற்றும் 'தளபதி' என்று அழைக்கப்படும் விஜய் ஆகியோர் திரைப்படங்களான துணிவு மற்றும் வாரிசு ஆகியோர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இருவரது திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் இருவரது ரசிகர்களும் கடந்த சில மாதங்களாகவே பெரும் எதிர்பார்ப்பில் இருந்தனர். இந்த சூழலில், துணிவு திரைப்படம் நேற்று (11ம் தேதி) நள்ளிரவு 1 மணிக்கும், வாரிசு திரைப்படம் அதிகாலை 4 மணிக்கும் வெளியானது. இதனைத்தொடர்ந்து இரு தரப்பு ரசிகர்களும் பல்வேறு விதமான கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

திரையரங்க வாயில்களில் பட்டாசுகள் வெடித்தும் ஆரவாரங்கள் எழுப்பியும், நடனமாடியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கோவையில் ஒரு திரையரங்கத்தின் முன்வாயில் உடைக்கப்பட்டது. சென்னையில் ரசிகர் ஒருவர் கொண்டாட்டத்தின் உயிரிழந்தார். தமிழகத்தின் பல இடங்களில் அத்துமீறியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இந்த சூழலில் இத்தகைய வரம்பு மீறிய கொண்டாட்டங்கள் தேவையா என்பது குறித்து கோவை மக்களிடையே கேள்வியெழுப்பினோம். அதற்கு மக்கள் கூறியதாவது: “எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல் காலத்தில் இருந்தே படங்கள் வெளியாகும்போது கொண்டாட்டங்கள் இருக்கும். ஆனால் இப்போது வரம்பு மீறிய வெறித்தனமான கொண்டாட்டங்கள் வெளிப்படுகிறது. கொண்டாட்டங்கள் வரம்புக்குள் இருக்க வேண்டும். ஒரு உயிர் போகும் அளவுக்கு இருக்கும் கொண்டாட்டங்களும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கொண்டாட்டங்களும் முற்றிலும் தேவையற்றது” என்றனர்.

First published:

Tags: Actor Ajith, Actor Vijay, Coimbatore, Local News, Thunivu, Varisu