ஹோம் /கோயம்புத்தூர் /

போலீசை தள்ளிவிட்ட அஜித் ரசிகர்கள்.. கோவை அர்ச்சனா தியேட்டரில் கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்..!

போலீசை தள்ளிவிட்ட அஜித் ரசிகர்கள்.. கோவை அர்ச்சனா தியேட்டரில் கூட்டத்தை விரட்டியடித்த போலீசார்..!

X
துணிவு

துணிவு திரைப்படம்

Coimbatore News: கோவையில் துணிவு படம் வெளியான திரையரங்கில் போலீசாருக்கும் ரசிகர்களுக்கும்  இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை பூ மார்க்கெட் பகுதியில் உள்ள அர்ச்சனா திரையரங்கில் நள்ளிரவு 1 மணிக்கு நடிகர் நடித்த துணிவு படம் வெளியானது. ரசிகர்களுக்காக திரையிடப்பட்ட இந்த காட்சியை நூற்றுக்கணக்கான அஜித் ரசிகர்கள் பார்த்தனர்.

முன்னதாக தங்களது விருப்பமான நடிகர் திரைப்படம் வெளியாவதை ஒட்டி ரசிகர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரைப்படத்தை காண ஒரே நேரத்தில் அதிக அளவில் ரசிகர்கள் திரண்டதால் திரையரங்க வாயில் கதவை போலீசார் பூட்டினர். இதனிடையே திரையரங்கத்தின் நுழைவு வாயிலை உடைத்துக்கொண்டு ரசிகர்கள் உள்ளே புகுந்தனர்.

அவர்களை கட்டுப்படுத்த போலீசார் தடுத்து நிறுத்திய போது போலீசாருக்கும் ரசிகர்களுக்கும்  இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ரசிகர்களை கட்டுப்படுத்த முடியாததால் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். இருப்பினும் ரசிகர்கள் கலைந்து செல்லாமல் இருந்ததால் நீண்ட நேரம் போராட்டத்திற்குப் பிறகு ரசிகர்கள் கண்ணாடி, கைபிடி இரும்பு அனைத்தும் உடைத்துக் கொண்டு தியேட்டருக்குள் புகுந்தனர்.

இதில் பாதுகாப்பில் இருந்த போலீஸ்காரர் ஒருவரையும் ரசிகர்கள் கீழே தள்ளிவிட்டனர். இந்த தள்ளுமுள்ளு காரணமாக ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால் திரையரங்க வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவியது.

First published:

Tags: Ajith, Ajithkumar, Coimbatore, Local News, Tamil Cinema, Tamil News, Thunivu