ஹோம் /கோயம்புத்தூர் /

பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கோவை வழக்கறிஞர்கள்.. என்ன காரணம்?

பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பிய கோவை வழக்கறிஞர்கள்.. என்ன காரணம்?

பொன்னியின்

பொன்னியின் செல்வன்

Ponniyin Selvan | பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்து மன்னர்களையும் வீரர்களையும் குறிப்பிடக்கூடிய காவியமாக பார்க்கப்படுவதால் அப்பெயரை அப்படியே பொன்னியின் செல்வன் என பயன்படுத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

'பொன்னியின் செல்வன்' என்ற பெயரை எந்தவகை சுருக்கு தலைப்பு இன்றி அப்படியே முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்று கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் உரிமை கோரிக்கை நோட்டீசை படக்குழுவினருக்கு அனுப்பி உள்ளனர்.

கல்கியால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக தயாரிக்கிறது லைகா நிறுவனம். இந்த திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியுள்ளார். இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், திரிஷா, பார்த்திபன், கார்த்தி, ஜெயம் ரவி, மலையாள நடிகர் ஜெயராம், பிரபு, விக்ரம் பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், நடிகைகள் சோபிதா துலிபலா, ஐஸ்வர்யா லெஷ்மி என நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியிட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கோவை வழக்கறிஞர்கள் நோட்டீஸ்:

இந்நிலையில் பொன்னியின் செல்வன் என்ற தலைப்பை PS-1 என்று சுருக்கி விளம்பரப்படுத்தப்படுகிறது. பொன்னியின் செல்வன் என்பது சோழர் காலத்து மன்னர்களையும் வீரர்களையும் குறிப்பிடக்கூடிய காவியமாக பார்க்கப்படுவதால் அப்பெயரை அப்படியே பொன்னியின் செல்வன் என பயன்படுத்த வேண்டும் என கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை வழக்கறிஞர்கள்

மேலும், இது குறித்து உரிமை கோரிக்கை நோட்டீசை லைகா தயாரிப்பு நிறுவனர் சுபாஸ்கரன், இயக்குநர் மணிரத்னம் , நடிகர் விக்ரம் , ரெட்ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

படக்குழுவினர் அதனை ஏற்று பொன்னியின் செல்வன் என்றே பெயரையே பயன்படுத்த வேண்டும் எனவும், படக்குழுவினர் மேற்கொள்ளும் நடவடிக்கையைப் பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாக கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Ponniyin selvan