ஹோம் /கோயம்புத்தூர் /

ஆயுதபூஜை, தொடர் விடுமுறை - கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கம்

ஆயுதபூஜை, தொடர் விடுமுறை - கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கம்

கோவை

கோவை

Coimbatore District | ஆயுதபூஜை மற்றும் தொடர் விடுமுறையொட்டி கோவையில் இருந்து பயணிகள் வெளியூர்களுக்கு செல்ல கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான கோவையில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை செய்து வருகின்றனர். அவர்கள் பண்டிகை மற்றும் திருவிழா காலங்களில் தங்களின் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

இந்நிலையில், ஆயுதபூஜையையொட்டி வரும் 4ம் தேதி மற்றும் 5ம் தேதி ஆகிய நாட்களில் அரசு விடுமுறை ஆகும். மேலும் பள்ளி மாணவ - மாணவிகளுக்கு நாளை (சனிக்கிழமை) முதல் காலாண்டு விடுமுறை தொடங்குகிறது. இதனால் வெள்ளிக்கிழமை மாலையில் இருந்து கோவையில் தங்கி இருக்கும் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர்.

கோவையில் இருந்து சென்னை, பெங்களூரு, திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவிலுக்கு செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகள் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன. அதேபோல் வெளியூர்களுக்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்துகளிலும் டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விட்டன.

இதையும் படிங்க: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புகுந்த காட்டு யானை கூட்டம்.. விரட்ட முடியாமல் திணறும் வனத்துறையினர்..

இதனால் பெரும்பாலான பேருந்துகளில் இருக்கை இல்லாத நிலை உள்ளது. எனவே பேருந்துகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க கோவையில் இருந்து சென்னை, மதுரை, தேனி, நெல்லை, நாகர்கோவில் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதல் பஸ் இயக்கப்பட உள்ளதாக அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகையில், “கூடுதலாக 40 பஸ்கள் ஆயுதபூஜை விடுமுறையையொட்டி கோவையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) மாலை முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை சென்னை, நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 40 பேருந்து இயக்கப்பட உள்ளன.

அதுபோல் சென்னையில் இருந்து கோவைக்கு கூடுதலாக 6 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பயணிகளின் கூட்டத்துக்கு ஏற்றார்போல, கோவையில் இருந்து வெளியூர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதேபோல், விடுமுறை முடிந்து கோவைக்கு திரும்பி வருவதற்கு வசதியாக 4ம் தேதி நெல்லை, நாகர்கோவில், மதுரை, தேனி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து கூடுதலாக இயக்கப்பட உள்ளது” என தெரிவித்தனர்.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News