ஹோம் /கோயம்புத்தூர் /

'லைப் டைம் செட்டில்மென்ட் டா..' நடிகர் அர்ஜூன் தாஸ் போலவே கோவையில் ஒரு குரல்...!

'லைப் டைம் செட்டில்மென்ட் டா..' நடிகர் அர்ஜூன் தாஸ் போலவே கோவையில் ஒரு குரல்...!

X
கோவை

கோவை

Arjun Das Voice Speaking Youth | கோவையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவருக்கு அச்சு அசலாக நடிகர் அர்ஜூன் தாஸ் போலவே குரல் உள்ளது. இதனால் அவர் குரலை கேட்பவர்கள் அர்ஜூன் தாசின் வசனங்களை பேசிக்காட்டக்கூறி அன்புத்தொல்லை செய்து வருகிறார்களாம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையைச் சேர்ந்தவர் யஸ்வந்த். 19 வயதான இந்த இளைஞர் கோவை அரசூர் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வருகிறார். இவரை பார்ப்பவர்கள் எல்லோரும் அவரை சூழ்ந்து கொண்டு "இந்த டயலாக் பேசிக்காட்டுங்க ப்ரோ.. இது வேண்டாம் அது.. ப்ளீஸ் ப்ரோ.." என்று அன்புத்தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தனர். என்னவென்று பார்த்தபோது தான் தெரிந்தது, யஸ்வந்த்-க்கு அச்சு அசலாக நடிகர் அர்ஜூன் தாஸ் போலவே குரல் உள்ளது. அவரிடம் பேச்சுக்கொடுத்தபோது தான் தெரிந்தது இயல்பாகவே அவரது குரல் நடிகர் அர்ஜூன் தான் குரல் போலவே உள்ளது என்பது.

இதுகுறித்து யஸ்வந்த் கூறுகையில், “கொரோனா பொது முடக்கத்திற்கு முன்பு வரை எனது குரல் இப்படி இல்லை. ஒரு சின்ன பையன் குரலாகவே இருந்தது. பொது முடக்க காலத்தில் வீட்டிலேயே இருந்தோம். அப்போது தான் எனது குரல் இப்படி மாறிவிட்டது. ஆனால் குரல் இப்படி மாறியதற்கான காரணம் தெரியவில்லை. முதலில் நண்பர்கள் என்னை கிண்டல் செய்தனர். சிறிது நாட்களுக்கு பிறகு எனக்கும் பழகிவிட்டது.

எனது குரலை கேட்பவர்கள் பலரும் ஆச்சரியமாக பார்ப்பார்கள். மருத்துவரிடம் சென்று குரல் பரிசோதனை செய்யலாம் என்று என் பெற்றோர்கள் கூறினர். ஆனால், பலரும் என்னை பாராட்டினர். அதனால் மருத்துவரிடம் செல்லவில்லை. பார்ப்பவர்கள் அனைவரும் அர்ஜூன் தாஸ் பேசிய 'லைப் டைம் செட்டில்மென்ட்' என்ற வசனத்தை பேசிக்காட்ட கூறுவார்கள். அதேபோல் அர்ஜூன் தாசின் பல வசனங்களை பேசிக்காட்ட கூறுவார்கள். டப்பிங் செய்யலாம் என்று இருக்கிறேன். நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கவும், வானொலியில் தொகுப்பாளராகவும் எண்ணம் இருக்கிறது. இவ்வாறு தனது கம்பீரமான குரலில் யஸ்வந்த் கூறினார்.

First published:

Tags: Coimbatore, Local News, Tamil Cinema