ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை ஆர்.எம்.எஸ் அலுவலத்தில் ஆதார் சேவை மைய வேலை நேரம் மாற்றம் 

கோவை ஆர்.எம்.எஸ் அலுவலத்தில் ஆதார் சேவை மைய வேலை நேரம் மாற்றம் 

ஆதார் சேவை மையம்

ஆதார் சேவை மையம்

Coimbatore News | கோவை ரயில்வே நிலைய சந்திப்பு வளாகத்தில் உள்ள ஆர். எம்.எஸ். அலுவகத்தில் உள்ள ஆதார் சேவையில் மையம் வேலை நேரம் மாற்றப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை ரயில்வே நிலைய சந்திப்பு வளாகத்தில் உள்ள ஆர். எம்.எஸ். அலுவகத்தில் உள்ள ஆதார் சேவையில் மையம் வேலை நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறை யுஐடிஏஐ உடன் இணைந்து புதிய ஆதார் எடுத்தல், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், தொலைபேசி எண் இணைப்பு மாற்றம் போன்ற சேவைகளை பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

இந்நிலையில், தற்போது, ஆதார் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், கைரேகை, கண் விழி புதிவுகள் , இ-மெயில் இணைப்பு, மொபைல் எண் இணைத்தல், மொபைல் எண் மாற்றம் , கே ஓய்சி செய்தல் அதிமாக செய்யப்படுகிறது.

Must Read : திருச்சிக்கு நடுவில் இப்படி ஒரு அருவி இருக்கா?! - செலவே இல்லாமல் ஆனந்த குளியலுக்கு ஏற்ற சுற்றுலா தலம்!

இந்த சேவைகள் பொது மக்களுக்கு அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேவையானது காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த சேவையை மதியம் 1 மணி முதல் இரவு 8 மணி வரை நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை ஆர்.எம்.எஸ். கோட்ட முதுநிலை கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த அறிவிபுக்கு பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவர்கள் கூறுகையில், சிலர் இரவு மற்றும் மதிய நேரத்தில் ,வேலைக்கு செல்கின்றனர். அவர்கள் அந்த நேரத்தில் இந்த சேவையை பெற முடியாது. எனவே, பழைய நேரத்திலயே செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Published by:Suresh V
First published:

Tags: Aadhaar card, Coimbatore, Local News