முகப்பு /கோயம்புத்தூர் /

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானமா? கோவையின் முதன்மை மைதானமே பாழாகி கிடக்கு!

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானமா? கோவையின் முதன்மை மைதானமே பாழாகி கிடக்கு!

X
கோவை

கோவை நேரு ஸ்டேடியம்

Coimbatore play ground | மாவட்டத்தின் முதன்மையான விளையாட்டு மைதான முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக இதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவை நேரு விளையாட்டு மைதானம் என்பது உள்ளூர் விளையாட்டு வீரர்களுக்கான வரப்பிரசாதம் என்று கூறலாம். சர்வதேச அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வரலாறுகளில் இடம்பிடிக்க வைத்துள்ளது இந்த மைதானம். கோவை வ.உ.சி பூங்கா அருகே அமைந்துள்ள இந்த மைதானத்தில் கால்பந்து, கிரிக்கெட் மற்றும் தடகளப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கடந்த 1970 மற்றும் 1990ம் ஆண்டுகளில் சந்தோஷ் டிராஃபி போட்டிகள் இந்த மைதானத்தில் நடைபெற்றது. இதனால் கோவை நேரு விளையாட்டு அரங்கம் பிரபலமான அரங்கமாக உள்ளது.

இந்த மைதானத்தில் 24 மணி நேரமும் போட்டிகள் நடத்தும் வகையில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இங்கு 400 மீட்டர் தடகளப் பாதையும் அமைந்துள்ளது. விளையாட்டு வீரர்களுக்கான தங்கும் அறைகள், மாநாடு மண்டபம், வீரர்கள் மைதானத்திற்குச் செல்வதற்கு பிரத்தியேக பாதை என அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.

சுமார் 30 ஆயிரம் பேர் அமர்ந்து விளையாட்டுகளை பார்வையிடும் வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக மாநில அளவிலான தடகளப்போட்டிகள் இந்த அரங்கத்தில் நடத்தப்பட்டு வருகிறது. இங்கு அமைந்துள்ள தடகளப்பாதை சின்தடிக் மூலம் அமைக்கப்பட்டுள்ளது. தடகளப்போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் கீழே விழுந்தால் காயம் ஏற்படாத வகையில் இந்த சின்தடிக் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் இந்த சின்தடிக் தளங்கள் சேதமடைந்து வருகின்றன. இந்த பாதையில் ஓடும் வீரர்கள் கால் தடுக்கி விழும் நிலையும் உள்ளது. மேலும், உள் விளையாட்டு அரங்கில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகளின் படிக்கட்டுகள், விளையாட்டு வீரர்கள் நுழையும் அறைகளும் சேதமடைந்து வருகின்றன. இதுகுறித்து கேட்க மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமாரை அழைத்த போது அவர் நமது அழைப்பை எடுக்கவில்லை.

தொகுதிக்கு ஒரு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். ஆனால் மாவட்டத்தின் முதன்மையான விளையாட்டு மைதான முறையான பராமரிப்பின்றி வைக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக இதனை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வீரர், வீராங்கனைகள் வலியுறுத்தியுள்ளனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Smart Play ground