ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் கால்நடைகள் வளர்ப்போர் உஷார்.. சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க பிரத்யேக வாகனம் தயார்..!

கோவையில் கால்நடைகள் வளர்ப்போர் உஷார்.. சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க பிரத்யேக வாகனம் தயார்..!

மாநகராட்சி வாகனம்

மாநகராட்சி வாகனம்

Coimbatore District | கோவை மாநகராட்சி பகுதிகளில், சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடிக்க புதிய வாகனம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை மாநகராட்சி பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடு, ஆடு, குதிரை போன்ற கால்நடைகள் சுற்றித்திரிகின்றன. மேய்ச்சலுக்காக காலையில் கால்நடைகளை அவிழ்த்து விடும் அதன் உரிமையாளர்கள் மாலையில் தான் தங்கள் வீடுகளுக்கு பிடித்து செல்கின்றனர்.

குறிப்பாக மாடுகள் பகல் முழுவதும் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. சில இடங்களில் சாலைகளிலேயே படுத்தும் கிடக்கின்றன. இதனால், அவ்வப்போது விபத்துகள் ஏற்படுகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. இவ்வாறு சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தபோதிலும் போதிய பலன் ஏற்படவில்லை.

இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த பிரத்யேக வாகனம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருப்பதாவது: புதிதாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த வாகனத்தில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்றலாம் என்று தெரிவித்துள்ளார்.

Must Read : ராமநாதபுரம் சென்றால் இந்த இடத்திற்குப் போக தவறாதீங்க - பிரமிப்பூட்டும் அரண்மனை!

மேலும், இன்று முதல் இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுவதாகவும், முதல் இருமுறை கால்நடைகள் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதே கால்நடைகள் மீண்டும் பிடிபடுவது தொடர்ந்தால் அந்த கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படுவதுடன், கால்நடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Coimbatore, Local News