முகப்பு /கோயம்புத்தூர் /

”மணிக்கூண்டு ரிட்டன்ஸ்..” கோவையின் அடையாளமான மணிக்கூண்டு புதுப்பொலிவுடன்...

”மணிக்கூண்டு ரிட்டன்ஸ்..” கோவையின் அடையாளமான மணிக்கூண்டு புதுப்பொலிவுடன்...

X
கோவை

கோவை மணிக்கூண்டு

Coimbatore District News : கோவையின் அடையாளத்திற்கு புத்துணர்வு கொடுக்கும் பணி.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையின் அடையாளமாக விளங்கி வரும் மணிக்கூண்டு கட்டிடத்தில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் புனரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளன.

சென்னைக்கு சென்ட்ரல் ரயில் நிலைய கட்டிடம், தஞ்சைக்கு பெரிய கோவில், கன்னியாகுமரிக்கு கடற்கரை என்பது போல ஒவ்வொரு ஊருக்கும் ஒரு அடையாளம் உள்ளது. அந்த வகையில் கோவைக்கான அடையாளம் தான் இந்த மணிக்கூண்டு.

கோவை டவுன்ஹால் பகுதியில் கோனியம்மன் கோவில் அருகே அமைந்துள்ளது நேரத்தை காட்டும் இந்த மணிக்கூண்டு கட்டிடம். இந்த கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. இதில் உள்ள மணி லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்டதாகும்.

கோவை என்ற வார்த்தை எந்த ஒரு புத்தகத்திலோ அல்லது சுவரொட்டியிலோ இடம்பெற்றாலும் அதில் கூடவே மணிக்கூண்டின் வரைபடமோ அல்லது புகைப்படமோ இடம்பெறும்.

இதையும் படிங்க : கோவைக்கு விமானத்தில் வந்த ஆதரவற்ற மாணவர்கள்... வரவேற்ற ஆட்சியர்...

இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழுதடைந்திருந்தது. நீண்ட நாட்களாக இந்த கடிகாரம் வேலை செய்யாமல் இருந்தது.

இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றும், கட்டிடத்தை புனரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்த சூழலில் மணிக்கூண்டு கட்டிடத்திற்கு வண்ணம் பூசி அதற்கு உயிரூட்டும் பணிகள் துவங்கியுள்ளன. நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சி மற்றும் கிரடாய் என்ற தொழில் அமைப்பும் இணைந்து மணிக்கூண்டு கட்டிடத்தை புனரமைக்க துவங்கியுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மணிக்கூண்டு கடிகாரம் சரி செய்யப்பட்டு, கட்டிடத்திற்கு வர்ணம் பூசும் பணிகள் துவங்க உள்ளன. இது கோவை மக்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

First published:

Tags: Coimbatore, Local News