கோவை மாநகர காவல் ஆணையராக பாலகிருஷ்ணன் பொறுப்பேற்றதில் இருந்து கோவைக்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வருகிறார். பொதுமக்கள், போலீஸ் இடையே நல்லுறவை மேம்படுத்த போலீசார் வீதிதோரும் நடந்து சென்று மக்களிடம் குறைகளை கேட்ட உத்தரவிட்டார்.
போலீசாரின் மன அழுத்தத்தை போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது. மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் நேரடியாக மக்கள் குறைகளை கேட்டறிந்தார்.
மேலும், ஆட்டோ நூலகம், வீதி நூலகங்கள், போலீசாரின் மன இறுக்கத்தை போக்க கோவை மாநகர போலீஸ் சார்பில், காவல் நிலையங்களில் நூலகங்கள் ஏற்படுத்தப்பட்டன.
மாநகர போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு, பொதுமக்களிடம் வரவேற்பு கிடைத்தது. மாநகரம் முழுவதும், 2,000 ஆட்டோக்களில் மினி நூலகம் ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு புத்தகங்களை எடுத்து சென்று, படித்து முடித்த பின்னர் மீண்டும் புத்தகங்களை இந்த ஸ்ட்ரீட் லைப்ரரியில் வைக்கலாம். பிறர் பயன்பெறும் வகையில், தங்களிடம் உள்ள புத்தகங்களை இந்த நுாலகத்தில் வைக்கலாம்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
நடைபயிற்சி சென்ற பின்னர் இளைப்பாற அமரும் நேரத்தில் புத்தகங்களை படிப்பது மனதிற்கு அமைதியை தருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News