முகப்பு /கோயம்புத்தூர் /

கோவைக்கு காரில் வந்த பறக்கும் பாம்பு.. அலேக்காக பிடித்த பாம்பு பிடி வீரர்..!

கோவைக்கு காரில் வந்த பறக்கும் பாம்பு.. அலேக்காக பிடித்த பாம்பு பிடி வீரர்..!

X
பறக்கும்

பறக்கும் பாம்பு

Coimbatore Flying snake | கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆனைகட்டி மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்ற போது அந்த பாம்பு காருக்குள் பறந்து பதுங்கியது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை திரும்பியவரின் காரில் ஏறிய பறக்கும் பாம்பை பாம்புகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரமாக மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பறக்கும் பாம்புகள் அல்லது தங்க மரப்பாம்புகள் என்று அழைக்கப்படும் ஒருவகை பாம்பு விஷமில்லாத பாம்பு வகையைச் சேர்ந்தது. சரைசோபிலா ஆர்னட்டா என்ற இந்த பாம்பு வகை அதிக நஞ்சில்லாத பாம்பாகும். பொதுவாக இந்த பாம்புகள் பச்சை நிறத்தில் கருப்பு, மஞ்சள் மற்றும் சிவப்பு நிற குறுக்கு கோடுகளுடன் காணப்படுகிறது.

மலைப்பிரதேசங்களில் காணப்படும் இவ்வகை பாம்புகள் ஒன்று முதல் மூன்று அடி நீளம் வரை வளரக்கூடியதாகும். இந்த பாம்பில் உள்ள விஷம் மனிதர்களை பாதிக்காது. பறவைகள் மற்றும் சிறு பூச்சியினங்களை உண்பதற்கு மட்டுமே இதன் விஷம் பயன்படும். இந்த வகை பாம்புகள் உயரமான மரக்கிளையிலிருந்து கீழே குதிக்கும். ஒரு மரத்திலிருந்து மற்றொரு மரத்திற்கு தாவும் திறமை கொண்டது. இப்படி தாவிவிடுவதாலேயே இதனை பறக்கும் பாம்புகள் என்று அழைக்கிறோம்.

இந்த பாம்பு எப்படி கோவைக்கு வந்தது?

கோவையைச் சேர்ந்த நபர் ஒருவர் ஆனைகட்டி மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளார். காரின் மேற்புறத்தில் திறந்து மூடும் வகையில் கண்ணாடி அவரது காரில் இருந்துள்ளது. கண்ணாடி திறந்திருந்த நிலையில் எப்படியோ இந்த பாம்பு காருக்குள் புகுந்துவிட்டது. சுற்றுலாவை முடித்துவிட்டு கோவை கவுண்டம்பாளையம் சென்ற அந்த நபர் தனது காரை சர்வீஸ் சென்டருக்கு கொண்டு சென்று விட்டுவிட்டு வீடு திரும்பியுள்ளார். காரை சர்வீஸ் செய்ய திறந்த போது அதில் பாம்பு இருப்பதைப் பார்த்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பாம்புகள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த ரத்தீஸ் என்பவருக்கு தகவல் அளித்துள்ளார். அங்கு சென்ற ரத்தீஸ் பாம்பு எவ்வகையைச் சேர்ந்தது என்பதை அறிந்து கொண்டு அதனை லாவகமாக பிடித்தார். தொடர்ந்து அந்த பறக்கும் பாம்பு கோவை மாவட்ட வனத்துறையிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டது. இந்த பாம்பின் தன்மை குறித்து அறிந்து கொண்ட கார் சர்வீஸ் சென்டர் ஊழியர்கள் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சரியத்துடன் அந்த பாம்பை பார்த்து சென்றனர்.

First published:

Tags: Coimbatore, Local News, Snake