ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் 12,000 புத்தகங்களைக் கொண்டு மாணவர்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் மரம்- கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பு

கோவையில் 12,000 புத்தகங்களைக் கொண்டு மாணவர்கள் உருவாக்கிய கிறிஸ்துமஸ் மரம்- கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பு

X
புத்தகத்தால்

புத்தகத்தால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

கோயம்புத்தூரில் புத்தகங்களைக் கொண்டு பள்ளி மாணவர்கள் கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கியது கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், 1:30 மணி நேரத்தில் 12,000 புத்தகங்களை கொண்டு கிறிஸ்துமஸ் மரம் உருவாக்கப்பட்டுள்ளது.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள எஸ் எஸ்.வி.எம் பள்ளி மற்றும் சந்திரன்யுவா பவுன்டேஷன் இணைந்து, கிறிஸ்துமஸை வரவேற்கும் வகையிலும், புத்தாண்டை வரவேற்கும் வகையிலும், கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளனர்.

கிறிஸ்துமஸ் மரம்

பள்ளி மாணவர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 10,000-க்கும் மேற்பட்ட புத்தகங்களை வைத்து கிறிஸ்துமஸ் மரத்தை, ஒரு மணி நேரம் 30 நிமிடங்களில் உருவாக்கி உள்ளனர்.

புத்தகத்தால் உருவாக்கப்பட்ட கிறிஸ்துமஸ் மரம்

இதனை பார்வையிட்ட கின்னஸ் உலக சாதனை அமைப்பின், சார்பாக கலந்து கொண்ட கிரிஸ்டோபர் டெய்லர் கிராப்ட் இந்த சாதனைக்கான சான்றிதழை வழங்கினார்.

கிறிஸ்துமஸ் மரம்

இதனை பெற்று கொண்ட பள்ளியின், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், மற்றும் சந்திரன் யூவா பவுண்டேஷன், அறங்காவலர் சசிகலா ஆகியோர் சான்றிதழ்களை மாணவர்களிடம் வழங்கினர்.

செய்தியாளர்: சௌந்தர் மோகன், கோயம்புத்தூர்.

First published:

Tags: Coimbatore, Local News