Home /coimbatore /

தேசியக்கொடி தான் எங்களுக்கு சோறு போடுது - தொழிலாளர்கள் நெகிழ்ச்சி..!

தேசியக்கொடி தான் எங்களுக்கு சோறு போடுது - தொழிலாளர்கள் நெகிழ்ச்சி..!

கோவையில்

கோவையில் தேசியக் கொடி உற்பத்தி மும்முரம்..

75th Independence Day: கோவையில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தையொட்டி தேசியக்கொடிகளை வீடுகளில் பறக்க விட மக்கள் ஆர்வம் காட்டுவதால் கோவையில் தேசியக்கொடி உற்பத்தி அதிகரித்துள்ளது.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தின் ஒரு பகுதியாக ஒவ்வொரு வீட்டிலும் தேசியக்கொடி என்ற பிரச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும். அதன் படி நாடு முழுவதும் 20 கோடி வீடுகள் மற்றும் அரசு அலுவலகங்களில் வருகிற 13-ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தேசியக் கொடியை பறக்கவிட வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.


தேசியக் கொடி உற்பத்தி மும்முரம்..


அதனை நாட்டு மக்களைப் பின்பற்ற செய்ய மத்திய அரசும் முயற்சி செய்து வருகிறது. மூன்று நாட்கள் வீடு தோறும் தேசியக்கொடிகள் ஏற்றப்பட உள்ளதால் தேசியக் கொடிகளுக்கு அதிக அளவில் தேவை எழுந்துள்ளது.  அந்த வகையில் கோவையில் உள்ள மணிக்கூண்டு பகுதியில் தேசியக் கொடி தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இங்கு தயாராகும் கொடிகளை வாங்குவதற்கு தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளன.


தேசியக் கொடி உற்பத்தி மும்முரம்..


இதனால் வழக்கத்தை விட கொடி உற்பத்தி அதிகரித்துள்ளது. கோவையில் 4 லட்சம் கொடிகள் தயாரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கொடி தயாரிக்கும் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளி ராஜேந்திரன் கூறுகிறார்.


தேசியக் கொடி உற்பத்தி மும்முரம்..


உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து அவர் கூறுகையில், "சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்கள் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னதாகவே எங்களுக்கு ஆர்டர்கள் வந்துவிடும். அந்த 5 முதல் 6 மாதங்கள் தான் எங்களின் வாழ்வாதாரம். மற்ற நாட்களில் ஆர்டர்கள் வந்தாலும் குறைவான அளவில்தான் வருவாய் இருக்கும்" என்றார்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Independence day, Local News

அடுத்த செய்தி