ஹோம் /கோயம்புத்தூர் /

ரூ.500 பரிசு - கோவை கரியாம்பாளையம் ஊராட்சி அசத்தல் அறிவிப்பு..

ரூ.500 பரிசு - கோவை கரியாம்பாளையம் ஊராட்சி அசத்தல் அறிவிப்பு..

கோவை

கோவை மாவட்டம் - கரியாம்பாளையம் ஊராட்சி

Coimbatore News | கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ளது கரியாம்பாளையம் ஊராட்சி. இந்த கிராமத்தில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களை வீடியோ படம் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் கரியாம்பாளையம் கிராமத்தில் பொது இடங்களில் குப்பை போடுபவர்களை வீடியோ படம் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ளது கரியாம்பாளையம் ஊராட்சி. இந்த ஊராட்சியை தூய்மையாக வைத்திருக்க நிர்வாகிகளும், ஊர் பொதுமக்களும் முனைப்பெடுத்து வருகின்றனர். பொது இடங்களில் குப்பை போடக்கூடாது என்று ஊர் முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக தூய்மையாக மாறியுள்ளது கரியாம்பாளையம்.

தூய்மை பணியாளர்களை கொண்டு குப்பைகளை சேகரிக்கும் இந்த ஊராட்சி, சேகரித்த குப்பைகளை மக்கும் குப்பை மக்காத குப்பை என்று தரம் பிரிக்கின்றது. மேலும், மக்கும் குப்பையை வைத்து ஊராட்சி மன்ற அலுவலகத்தின் அருகிலேயே மண்புழு உரம் தயாரிக்கும் பணி நடைபெறுகிறது.

மேலும் படிக்க: கோவை குருந்தமலையில் உருவான ஹிட் திரைப்படங்களின் லிஸ்ட்- மனதை கொள்ளை கொள்ளும் இடம்!

கரியாம்பாளையம் ஊராட்சி கோவை-சத்தி சாலையில் அமைந்துள்ளது. இதனால் வெளியூர் மக்கள் இந்த ஊர் வழியாக வந்து செல்வார்கள். மேலும் சாலையோரங்களில் வியாபாரிகளும் கடைகள் அமைத்துள்ளனர்.

கோவை கரியாம்பாளையம் ஊராட்சி

இவர்கள் சாலையோரங்களில் குப்பைகளை வீசியெறிந்து சென்றுவிடுகின்றனர். இதனைத் தடுக்கும் விதமாக கரியாம்பாளையம் ஊராட்சி நிர்வாகம் சாலையோரங்களில் அறிவிப்புப் பலகைகளை வைத்துள்ளது. அதில், பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் பொது இடங்களில் குப்பை போடுபவர்களை வீடியோ படம் பிடித்துக் கொடுத்தால் 500 ரூபாய் அன்பளிப்பு வழங்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது கரியாம்பாளையம் மட்டுமல்லாது சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் மத்தியிலும் பொறுப்புணர்வை ஏற்படுத்து விதமாகஅமைந்துள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News