Home /coimbatore /

கண்ணை கட்டிக்கொண்டு 11 மணி நேரம் சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை.!

கண்ணை கட்டிக்கொண்டு 11 மணி நேரம் சிலம்பம் சுற்றி 5 வயது சிறுவன் சாதனை.!

கோவை

கோவை சிறுவன் சிலம்பத்தில் சாதனை..

Coimbatore District Latest News | கோவையை சேர்ந்த 5 வயது சிறுவன் தொடர்ந்து 11 மணி நேரம் சிலம்பம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore
கோவை உடையாம்பாளையம் பகுதியில் முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தில் கோவையைச் சார்ந்த கார்த்திக் குமார் - சரண்யா தேவி தம்பதியின்  5 வயது மகன் ரக்சன் சிலம்பம் பயின்று வருகிறார்.

இதனிடையே ரக்சன், குழந்தை தொழிலாளர்களுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அப்பகுதியில் உள்ள வஞ்சியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் காலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை தொடர்ச்சியாக கண்களைக் கட்டிக் கொண்டு ஒற்றை சிலம்பத்தில் சுமார் 11 மணி நேரம் சுற்றி சாதனை படைத்துள்ளார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த உலக சாதனையை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் அங்கீகரித்துள்ளது. அதற்கான சான்றிதழை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ், கோவை தலைவர் பிரகாஷ் ராஜ், நடுவர்கள், பிரதீபா, பாலாஜி, ஆகியோர் ரக்சனிடம் வழங்கினர்.
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News

அடுத்த செய்தி