முகப்பு /கோயம்புத்தூர் /

5 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் இனி இலவசம்.. என்ன சொல்றாங்க கோவை மக்கள்?

5 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் இனி இலவசம்.. என்ன சொல்றாங்க கோவை மக்கள்?

X
மாதிரி

மாதிரி படம்

Tamilnadu Government Bus : 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்ய டிக்கெட் வசூலிக்கப்படமாட்டாது என்பது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து கோவை பொதுமக்கள் என்ன தெரிவிக்கின்றனர் என்பதை இந்த காணொளியில் காணலாம். 

மேலும் படிக்கவும் ...
  • Last Updated :
  • Coimbatore, India

5 வயது குழந்தைகளுக்கு பேருந்தில் இலவசம் பயணம் குறித்து கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கருத்துகள்.

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் பயணிக்க 3 வயது குழந்தைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. பள்ளி மாணவர்களும், 60 வயதை கடந்த முதியவர்களும் இலவசமாக பேருந்துகளில் பயணிக்க பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே திமுக ஆட்சி அமைந்ததும், நகர பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட மாட்டது என்று அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பெண்கள் இலவசமாக பேருந்துகளில் பயணித்து வருகின்றனர்.

கோயம்புத்தூர் மாவட்ட மக்களின் கருத்து

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு இந்த திட்டத்தால் பலன்கள் கிடைத்துள்ளதாகவும், வீட்டில் இருந்த பெண்கள் பலரும் இந்த திட்டத்தால் வேலைக்கு செல்ல தொடங்கியிருப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே குழந்தைகளுக்கான கட்டணமில்லா அரசு பேருந்து பயணத்துக்கான வயது வரம்பை தமிழ்நாடு அரசு உயர்த்தி இருக்கிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    அதன்படி 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு கட்டணமில்லா பேருந்து சேவையை வழங்கி வந்த அரசு தற்போது அதை 5 வயதாக அதிகரித்துள்ளது. அதன்படி, இனிமேல் 5 வயது வரையிலான குழந்தைகளும் அரசு பேருந்துகளில் கட்டணம் வசூலிக்கப்படாது. இது கோவை பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

    First published:

    Tags: Coimbatore, Local News