ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடர் வனக்காடு.. மாநகராட்சியின் பலே திட்டம்!

கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் அடர் வனக்காடு.. மாநகராட்சியின் பலே திட்டம்!

X
கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

Coimbatore | கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோயம்புத்தூரில் வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 5 ஏக்கர் நிலத்தில் மியா வாக்கி என்னும் அடர் வனக்காடு அமைக்கப்படவுள்ளது.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டு பகுதிகளில் இருந்து வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு தினமும் 800 டன் முதல் 900 டன் வரை குப்பைகள் சேகரித்து அனுப்பப்படுகின்றன. இதில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்காமல் குப்பைகளை மக்கள் அனுப்புவதால் மீதேன் எரிவாயு உருவாகி வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் தீ விபத்தும் அடிக்கடி ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

இதனை தடுக்கும் விதமாகவும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கிற்கு கொண்டு வரும் குப்பைகளை குறைக்கவும், மாநகராட்சிக்குட்பட்ட கவுண்டம்பாளையம், ஒண்டிப்புதூர், உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் 69 மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் என்ற நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. அதன் பின் நிர்வாக காரணங்களுக்காக 32 நுண்ணுயிர் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டன. இதற்கான பணிகள் துவங்கி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இதில் தற்போது சுமார் 12 நுண்ணுயிர் மையங்கள் பணிகள் நிறைவடைந்து நல்ல நிலையில் இயங்கி வருகிறது. இதனிடையே கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 66 ஏக்கரில் பல லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்படாமல் உள்ளது. இதனை பயோமைனிங் முறையில் அழித்திட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் தினமும் சுமார் 40 டன் வரை குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘கோவை வெள்ளலூர் குப்பைக்கிடங்கில் பயோ மைனிங் மூலம் தேங்கி உள்ள குப்பைகளை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் சுமார் 20 ஏக்கர் வரை தேக்கி வைத்திருந்த குப்பைகள் அழிக்கப்பட்டுள்ளன. இதில் 5 ஏக்கர் நிலத்தில் மியா வாக்கி என்னும் அடர் வனக்காடுகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன’’என்றனர்

First published:

Tags: Coimbatore, Forest, Local News