Home /coimbatore /

கோவைக்கு வந்தாச்சு.. துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் 4ம் தலைமுறை மருத்துவ ரோபோ..

கோவைக்கு வந்தாச்சு.. துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் 4ம் தலைமுறை மருத்துவ ரோபோ..

4ம்

4ம் தலைமுறை மருத்துவ ரோபோ..

Coimbatore District | துல்லியமான அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நான்காம் தலைமுறை மருத்துவ ரோபோ கோவையில் அறிமுகம். இந்த வகையான மருத்துவ ரோபோ இந்தியா முழுவதிலும் 100 மட்டுமே உள்ளன.

புற்றுநோய், குடல் மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளை மிக துல்லியமாக மேற்கொள்ளும் விதமாக கோவை பி.எஸ்.ஜி மருத்துவமனையில் ரோபோ டாவின்சி எக்ஸ் என்ற மருத்துவ ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு பகுதியில் புகழ்பெற்ற பி.எஸ்.ஜி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் ரோபோடிக் அறுவை சிகிச்சை சேவைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவமனையில் நான்காவது தலைமுறை அறுவை சிகிச்சை ரோபோ- டாவின்சி எக்ஸ் நிறுவப்பட்டுள்ளது. இந்த வகையான மருத்துவ ரோபோ இந்தியா முழுவதிலும் 100 மட்டுமே உள்ளன.

மருத்துவ ரோபோ


ரோபோ அறுவை சிகிச்சையின் நன்மைகள் & கட்டண விவரம்:

கோவையில் முதல் முறையாக இவ்வகை ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ரோபோ மூலமாக உடல் குறைப்பு , புற்றுநோய், குடல் சம்மந்தப்பட்ட மற்றும் குழந்தைகளுக்கான அறுவை சிகிச்சைகளை துல்லியமாக மேற்கொள்ள முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவ ரோபோ


இவ்வகை ரோபோக்கள் விலை ரூ.15 முதல் ரூ.20 கோடி வரை வரும் என்பதால் இவை இந்தியாவில் அதிகளவில் பயன்படுத்தப்படுவதில்லை. இவை தன்னிச்சையாக செயல்படாமல், அறுவை சிகிச்சை நிபுணரின் உதவியோடு செயல்படக்கூடியது. ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் அனுபவத்தை விட துல்லியமாக அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ளும் இந்த ரோபோக்கள் அறுவை சிகிச்சை செய்யும் இடத்தை திரையில் 10 மடங்கு பெரிதுபடுத்திக் காட்ட வல்லவை என்கின்றனர் மருத்துவர்கள்.

மருத்துவ ரோபோ


ரோபோட்டிக் நுட்பத்தின் சிறப்புகள்

ஓபன் சர்ஜரி என்று சொல்லப்படுகிற திறந்த அறுவை சிகிச்சையில் வெளியும் உள்ளும் காயம் ஏற்படுகிறது. இந்த ஓபன் அறுவை சிகிச்சையில் துல்லியம் என்பது கடினமாக உள்ளது.

அதேபோல லேப்ரோஸ்கோபி அறுவை சிகிச்சையில் சிறு துளைகளை ஏற்படுத்தி அறுவை சிகிச்சை செய்தாலும், லேப்ரோஸ்கோபி எல்லா வகையிலும் திரும்பி செயல்பட முடியாது. இரண்டு வகையில் மட்டும் தான் செயல்படும்.இதனால் குறுகிய சிக்கலான இடங்களில் அறுவை சிகிச்சை செய்வதில் சிரமம் உள்ளது.
ஆனால் இந்த ரோபோடிக் அறுவை சிகிச்சை இந்த குறைபாடுகளை சரி செய்கிறது.ரோபோடிக் கருவிகள் 8 mm துளைகள் மூலமாக வயிற்றுக்குள் சென்று, அல்லது நெஞ்சுக்குள் அல்லது இருதயம் அருகே சென்று ஏழு திசைகளிலும் திரும்பி 560 டிகிரி வரைக்கும் சுழன்று இயங்க முடியும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வரும் காலங்களில் இவ்வகை ரோபோக்கள் மருத்துவ உலகில் இன்றியமையாத தேவையாக இருக்கும் என்றும், அடுத்தடுத்த நிறுவனங்கள் இந்த ரோபோ உற்பத்தியில் இறங்கினால் இதன் விலையும் குறையும் என்பது நிபுணர்களின் கருத்தாக உள்ளது.

ரோபோட்டிக் சர்ஜரி குறித்த தகவல்களை பெற விரும்பினால் கோவை பிஎஸ்ஜி மருத்துவமனையை 0422 434 5353 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்..

இணையதளத்தில் தகவல்களை பெற:  https://www.psghospitals.com/

PSG Hospital, Peelamedu
கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து பிஎஸ்ஜி மருத்துவமனைக்கு செல்லும் பாதையை காட்டும் வரைபடம்..


 
Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News, Robo

அடுத்த செய்தி