ஹோம் /கோயம்புத்தூர் /

கோவையில் 408 பேர் ஒன்று சேர்ந்து குழு நடனம்- பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்த கல்லூரி மாணவிகள்

கோவையில் 408 பேர் ஒன்று சேர்ந்து குழு நடனம்- பார்ப்பவர்களை மெய்சிலிர்க்கச் செய்த கல்லூரி மாணவிகள்

X
மாணவிகள்

மாணவிகள் நடனம்

Coimbatore | கோயம்புத்தூரில் 408 மாணவிகள் ஒன்று சேர்ந்து ஆடிய நடனம் பார்ப்பவர்களை பரவசமடையச் செய்தது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் உள்ள தனியார் கல்லூரியில்பெண் சக்தியை பிரதிபலிக்கும் வகையில் ஒரே நேரத்தில் 408 மாணவிகள் இணைந்து பொன்னி நதி பாடலுக்கு குழு நடனம் ஆடினர்.

கோவை பீளமேடு பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில்கல்லூரி மாணவிகள், பெண் சக்தியை பிரதிபலிக்கும் விதமாக குழு நடனமாடினர். ஒரே நேரத்தில் 408 மாணவிகள் இணைந்து பொன்னியின் செல்வன் படத்தில் வரும் பொன்னி நதி பாடலுக்கு ஒரு சேர நடனமாடியது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

கடந்த 15 நாட்களாக இந்த நடனத்திற்காக பயிற்சி பெற்றதாகவும், நடனத்தை ஒருங்கிணைக்கவும், கற்றுக் கொடுக்கவும் 24 ஒருங்கிணைப்பாளர்கள் இருந்ததாகவும் மாணவிகள் தெரிவித்தனர்.

மாணவிகள் நடனம் 

இதுகுறித்து மாணவிகள் கூறுகையில், ’கடந்த 15 நாட்களாக தொடர்ந்து பயிற்சி பெற்றோம். 400க்கும் மேற்பட்டோர்ஒரே நேரத்தில் பயிற்சி பெறுவது சற்று சிரமமாக இருந்தது. பயிற்சியின் போது ஏற்படும் தொய்வுகளை சரி செய்ய பல்வேறு விளையாட்டுகளை நடத்தினோம்.

நடனமாடிய மாணவிகள்

Union Budget 2023 : பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கும் சிறு குறு தொழில் நிறுவனங்கள்..!

தினமும் காலை 9 மணி முதல் மாலை 3 மணி முதல் பயிற்சி இருந்தது. தற்போது ஒரே சேர நடனமாடியுள்ளது எங்களுக்கு திருப்தியை அளித்துள்ளது. சிறப்பாக நடனமாடியதாக அனைவரும் பாராட்டியுள்ளனர்’என்றனர்.

செய்தியாளர்: சௌந்தர் மோகன், கோயம்புத்தூர்.

First published:

Tags: Coimbatore, Local News