முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... மாணவி கன்னத்தில் கேக் தடவிய இளைஞர்கள்... தட்டி தூக்கிய போலீஸ்...!

நடுரோட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம்... மாணவி கன்னத்தில் கேக் தடவிய இளைஞர்கள்... தட்டி தூக்கிய போலீஸ்...!

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள்

கைது செய்யப்பட்டுள்ள நபர்கள்

கைது செய்யப்பட்ட 4 பேர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Coimbatore, India

கோவை குனியமுத்தூர் பகுதியில் 15 வயது மாணவி ஒருவர் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.  ஆறுமுக கவுண்டர் வீதியில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் அருகே மாணவி நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது 4 இளைஞர்கள் நடுரோட்டில் வைத்து கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியுள்ளார். அந்த வழியாக  செண்ற மாணவியின் கன்னத்தில் திடீரென கேக்கை தடவியுள்ளனர். இதனை தடுத்த மாணவி ஏன் இப்படி செய்கிறீர்கள் என தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 4 பேரும் சேர்ந்து மாணவியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: மீண்டும் ஒரு ஊரடங்கு...? கொரோனாவை விட கொடிய வைரஸ் பரவ வாய்ப்பு... WHO எச்சரிக்கை...!

top videos

    இதனையடுத்து இதுகுறித்து மாணவி குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், நடுரோட்டில் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அதே பகுதியைச் சேர்ந்த அபிஷேக் ( 21), சஞ்சீவி (19). சந்தோஷ் (20) மற்றும் 16 வயது சிறுவன் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம், மானபங்க முயற்சி உட்பட 4 பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    First published:

    Tags: Coimbatore, Crime News