முகப்பு /செய்தி /கோயம்புத்தூர் / ரூ.1.09 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!

ரூ.1.09 கோடி மதிப்புள்ள 3 கிலோ தங்கம் பறிமுதல்... கோவை விமான நிலையத்தில் பரபரப்பு..!

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

பறிமுதல் செய்யப்பட்ட தங்கம்

coimbatore | ஷார்ஜாவிலிருந்து விமானம் மூலம் கோவைக்கு 3 கிலோ தங்கம் கடத்தி வந்தவர்களை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

சர்ஜாவில் இருந்து கோவைக்கு  விமானத்தில் கடத்தி வரப்பட்ட 3.03 கிலோ தங்கத்தை  பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை கைது செய்தனர்.

சார்ஜாவிலிருந்து நேற்று காலை கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து பயணிகளிடம் சோதனையில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கத்தை கடத்தி வந்த நான்கு பேரை அதிகாரிகள் பிடித்தனர்.

அவர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்டுகளிலும் உள்ளாடைகளிலும் மறைத்து வைத்து சுமார் 3.03 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு 1.09 கோடி ரூபாய் ஆகும். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், புதுக்கோட்டையை சேர்ந்த ஜியாவுதீன், மற்றும் சென்னையை சேர்ந்த சேஷ் முகமது என்ற இருவரை கைது செய்தனர்.

மேலும் படிக்க...விழுப்புரத்தில் சாதனை படைத்த 1000 பேர்..

இது தொடர்பாக மற்ற இருவரிடமும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

top videos
    First published:

    Tags: Coimbatore, Gold