முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டு நர்கள் தீக்குளிக்க முயற்சி..!

கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆட்டோ ஓட்டு நர்கள் தீக்குளிக்க முயற்சி..!

X
தீக்குளிக்க

தீக்குளிக்க முயற்சித்த ஆட்டோ ஓட்டுநர்கள்

Coimbatore News |கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு 3 ஆட்டோ ஓட்டு நர்கள் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவை துடியலூரில் ஆட்டோ ஓட்டுவதற்கு ஒரு தரப்பினர் தங்களை அனுமதிக்காமல் பிரச்சனை கொடுத்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிப்பதாக கூறி ஒரு பெண் உட்பட மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை துடியலூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் முனீர், ஓம் முருகா, பிரகாஷ். இவர்கள் மூவரும் அதே பகுதியில் ஆட்டோ ஓட்டுநர்களான உள்ளனர்.இந்த நிலையில் துடியலூர் பகுதியை சேர்ந்த சக ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர் இவர்கள் மீது மத ரீதியாகவும், ஜாதி ரீதியாகவும், தீண்டாமையை கடைப்பிடிப்பதாகவும், ஆட்டோ ஓட்டுவதற்கு அனுமதிக்காமல் தொடர்ந்து பிரச்சனை கொடுத்து வருவதாகவும் குற்றம்சாட்டுகின்றனர்.

இதனிடையே மூவரும், தங்களது குடும்பத்தினருடன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநரின் தாய் உட்பட ஆட்டோ ஓட்டுநர்கள் மூன்று பேரும் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். இதைக் கண்ட போலீசார் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி நான்கு பேரையும் மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

ஆட்டோ ஓட்டி வாழ்க்கையை நடத்தி வரும் தங்களை சிலர் தடுப்பதாகவும் இதனால் குழந்தைகளின் பள்ளிச் செலவிற்கு கூட வழியில்லாத நிலையில் இருப்பதாகவும், இது மன வேதனைக்கு உள்ளாக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர். ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரென நான்கு பேர் தீக்குளிக்க முயன்றதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Coimbatore, Local News