முகப்பு /கோயம்புத்தூர் /

ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2,534 கிலோ பழங்கள்..! கோவையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..

ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2,534 கிலோ பழங்கள்..! கோவையில் அதிரடி காட்டிய அதிகாரிகள்..

X
ரசாயனம்

ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்கள்

Coimbatore News : கோவை டவுன்ஹால் பகுதியில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2,534 கிலோ எடை கொண்ட பழங்களை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூரில் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 2,534 கிலோ பழங்களை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

வெயில் காலத்தில் உடனடியாக லாபத்தை ஈட்ட வியாபாரிகள் சிலர் காய் பதத்தில் உள்ள பழங்களை ரசாயனம் மூலம் பழுக்க வைத்து விற்பனை செய்கின்றனர். இதனை சாப்பிடுபவர்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுகிறது.

இதனிடையே கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவின்படி கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் தமிழ் செல்வன் தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய 16 பேர் கொண்ட குழுவினர் கோவை முழுவதும் அவ்வப்போது சோதனை நடத்தி வருகின்றனர்.

ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

இதையும் படிங்க : மதுரையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை.. குஷியில் மக்கள்!

அதன்படி இந்த குழுவினர் கோவை டவுன்ஹால், வைசியாள் வீதி, பெரிய கடைவீதி, பவளவீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி, போன்ற பல்வேறு இடங்களில் திடீரென சோதனை மேற்கொண்டனர். மொத்தம் 45 கடைகள் மற்றும் 16 குடோன்களில் சோதனை நடத்தப்பட்டது.

இதில் சிலர் ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களை விற்பனை செய்து வருவது தெரியவந்தது. தொடர்ந்து ரசாயனம் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 22 கிலோ மாம்பழங்கள் மற்றும் 2 ஆயிரத்து 510 கிலோ சாத்துக்குடியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தொடர்ந்து அவற்றை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழித்தனர். இதுபோன்ற பழங்களை விற்பனை செய்த வியாபாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யபட்ட பழங்களின் மதிப்பு 12 லட்சத்து, 56 ஆயிரத்து 400 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    First published:

    Tags: Coimbatore, Local News