ஹோம் /கோயம்புத்தூர் /

தீபாவளிக்கு கோவையில் இருந்து சொந்தஊர் செல்ல 240 சிறப்பு பேருந்துகள் - பேருந்து நிலைய விவரம்

தீபாவளிக்கு கோவையில் இருந்து சொந்தஊர் செல்ல 240 சிறப்பு பேருந்துகள் - பேருந்து நிலைய விவரம்

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

Diwali special bus : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

வரும் 24ஆம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு கோவையில் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் பணிபுரியும் பிற மாவட்டங்கள், பிற மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள், மற்றும் மாணவ-மாணவிகள் தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல தயாராகி வருகின்றனர்.

இவர்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு முடிந்த நிலையில், அரசு பேருந்துகளிலும் முன்பதிவு முடியும் நிலையில் இருக்கிறது.

இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோவையில் இருந்து மதுரை, தேனி, திருச்சி உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கு வருகிற 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை 240 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு 100 பேருந்துகளும், திருச்சி மற்றும் சேலத்திற்கு தலா 50 பேருந்துகளும், தேனிக்கு 40 பேருந்துகள் என மொத்தம் 240 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Must Read : விஜய்சேதுபதி பட சூட்டிங் ஸ்பாட் இதுதானா! - அட இது நம்ம புதுக்கோட்டையில தாங்க இருக்கு! 

மேலும், பயணிகள் ஒரே இடத்தில் கூடுவதால் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க சிறப்பு பேருந்துகள் அனைத்தும் வெவ்வேறு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி மதுரை, தேனி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கான சிறப்பு பேருந்துகள் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், கரூர், திருச்சி செல்லும் பேருந்துகள் சூலூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், சேலம், திருப்பூர், ஈரோடு செல்லும் பேருந்துகள் கோவை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் புறப்படும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல, ஊட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் செல்லும் பேருந்துகள் சாய்பாபாகாலனியில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும். அத்துடன் மேற்கண்ட பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் எளிதில் சென்று வர, காந்திபுரம், உக்கடம் ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Coimbatore, Deepavali, Diwali, Local News, Special buses