ஹோம் /கோயம்புத்தூர் /

தீபாவளி ஷாப்பிங் வருவோரை டார்க்கெட் செய்யும் திருடர்கள்.. கோவை கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு..

தீபாவளி ஷாப்பிங் வருவோரை டார்க்கெட் செய்யும் திருடர்கள்.. கோவை கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு..

கோவை

கோவை கடைவீதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு..

Coimbatore Latest News | கோவை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

கோவையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு

திருடர்களை பிடிக்க போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை நகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய கடை வீதி, ராஜ வீதி, ஒப்பணகார வீதி, கிராஸ்கட் சாலை, டி.பி சாலை உள்பட 50-க்கும் மேற்பட்ட முக்கிய வணிக, வர்த்தக பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கூட்ட நெரிசலை கண்காணிக்க நகரில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வாட்ச் டவர் அமைக்கப்பட்டுள்ளது. போலீசார் பைனாகுலர் மூலமாகவும், கண்காணிப்பு காமிரா மூலமாகவும் கூட்ட நெரிசலையும், திருடர்களையும் கண்காணித்து வருகின்றனர்.

மேலும் படிக்க:  ஆளை மயக்கும் பேரழகு... வால்பாறை அக்காமலைக்கு செல்லும் முன் இதையெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

போக்குவரத்து நெரிசல் தவிர்க்க, முக்கிய சாலைகளில் போலீசார் சீரமைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பல்வேறு இடங்களில் வாகனம் நிறுத்தும் இடங்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளது. நெரிசல் மிகுந்த இடங்களில் வாகனங்கள் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி திருடர்களை பிடிக்க நகரில் முக்கிய இடங்களில் போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காந்திபுரம், உக்கடம் ஆகிய பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் மிக்க வீதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க:  பொள்ளாச்சிக்கு மினி கோடம்பாக்கம்னு பெயர் வாங்கி தந்தது இந்த பங்களா தானா..!

வெளியூர் திருடர்கள் மற்றும் உள்ளூர் திருடர்கள் என மொத்தம் 150 பேரின் புகைப்படங்களை வைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

இவர்கள் கோவையில் லாட்ஜ், ஓட்டல்களில் தங்கி கைவரிசை காட்ட முயற்சிப்பதாக தகவல் வந்துள்ளது. இவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதுகுறித்து போலீசார் கூறுகையில், வழக்கமான நாட்களை காட்டிலும் 2 மடங்கு வாகன போக்குவரத்து அதிகமாகிவிட்டதாகவும், தீபாவளி முடியும் வரை மாலை நேரங்களில் கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்என்றனர்.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Deepavali, Local News