முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை பேரூர் குளக்கரையில் 2,000 மரக்கன்றுகள்.. நடவு பணியில் சிறுவர்கள்!

கோவை பேரூர் குளக்கரையில் 2,000 மரக்கன்றுகள்.. நடவு பணியில் சிறுவர்கள்!

X
நடவு

நடவு பணியில் சிறுவர்கள்

Coimbatore News | கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு போன்ற பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் பணிகளால் கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Coimbatore, India

கோவையில் தன்னார்வலர்கள் இணைந்து பேரூர் பெரியகுளத்தின் கரைப்பகுதியில் 2 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்தனர். இதில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

கோவையை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு.இந்த அமைப்பில் உள்ள தன்னார்வலர்கள் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் குளங்கள் மற்றும் குட்டைகளை தூர்வாருதல், மியாவாக்கி குறுங்காடுகளை உருவாக்குதல், வாய்க்காலை தூர்வாரி கண்காணித்தல், குளக்கரையில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுதல், அணைக்கட்டுகளில் களப்பணி செய்தல், கல்லூரி,பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு போன்ற பல்வேறு தன்னார்வ அமைப்புகளின் பணிகளால் கோவை மாவட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகரித்துள்ளது. மேலும், பொதுமக்கள் மத்தியில் நீர் பாதுகாப்பு, மேலாண்மை மற்றும் மரங்களின் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

இதனிடையே கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் பேரூர் பெரிய குளத்தை ஒட்டி ஒரு குறுங்குட்டை அமைத்தனர். அங்கு ஏற்கனவே 3 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நடவு செய்தனர். இந்த சூழலில், தற்போது மீண்டும் 2 ஆயிரம் மரக்கன்றுகளை நடவு செய்துள்ளனர்.

நகரின் பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் நாட்டு வகை மரக்கன்றுகள், பழ வகைகள், மூலிகை மற்றும் பூச்செடிகள் இங்கு வைக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இணைந்து மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இதில் பெற்றோருடன் குழந்தைகளும் கலந்து கொண்டு மரக்கன்றுகளை ஆர்வத்துடன் நடவு செய்தனர். தொடர்ந்து மரங்களை வளர்ப்பதன் அவசியம் குறித்தும், குளங்களை பாதுகாக்க வேண்டியது குறித்தும் குழந்தைகளிடையே தன்னார்வலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

First published:

Tags: Coimbatore, Local News, Tree plantation