தனியார் யூடியூப் சேனல் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாக டி. டி. எப் .வாசன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே காரமடை அடுத்துள்ள வெள்ளியங்காடு முத்துக்கல்லூர் கிராம பகுதியைச் சேர்ந்தவர் டி.டி.எப். வாசன் என்கிற வைகுண்ட வாசன். இவர் இளம் வயது முதலே இரு சக்கர வாகனங்களை வேகமாக ஓட்டுவதில் ஆர்வம் கொண்டவர். யூடியூப் சேனல் மூலம் பிரபல டிராவல் பிளாக்கராகவும் புகழ்பெற்றவர். கோவையில் இருந்து லடாக் வரை சென்ற அவரது வீடியோ லட்சக்கணக்கான இளைஞர்களால் லைக் செய்யப்பட்டது.
இவர் மீது ஏற்கனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிவேகமாகவும், அஜாக்கிரதியாகவும் இரு சக்கர வாகனத்தை ஓட்டி சென்றதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டதால் அவர் நேரில் ஆஜராகி மன்னிப்பு கடிதமும் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தனியார் யூடியூப் செய்தி சேனலான இந்தியா கிளிட்ஸ் செய்தியாளரை தரக்குறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது இது குறித்து தனியார் நிறுவனம் சார்பில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது புகாரின் பேரில் காவல்துறையினர் டி.டி.எப். வாசன் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்தியாளர்: எஸ் யோகேஸ்வரன், மேட்டுப்பாளையம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Coimbatore, Local News, TTF Vasan