ஹோம் /கோயம்புத்தூர் /

கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகளுக்கு தடை.!

கோவை மாவட்டத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் மற்றும் இறைச்சி கடைகளுக்கு தடை.!

கோவை

கோவை

Kovai District | காந்தி ஜெயந்தி மற்றும் மிலாதுநபி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருவதால்,  கோவை மாவட்டத்தில் வரும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும்,  காந்தி ஜெயந்தியன்று தடை இறைச்சி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore, India

காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் வருவதால், கோவை மாவட்டத்தில் வரும் இரண்டு நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், காந்தி ஜெயந்தியன்று இறைச்சி கடைகள் செயல்படவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி மற்றும் மிலாடி நபியை முன்னிட்டு டாஸ்மாக் மதுபான கூடங்கள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ளவாறு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், அரசு டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் மூடப்பட வேண்டும் என நெறிமுறை வரையறுக்கப்பட்டுள்ளது.

எனவே, காந்தி ஜெயந்தி 2.10.2022 மற்றும் நபிகள் நாயகம் பிறந்த நாள் 9.10.2022 ஆகிய தினங்களில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் மதுபான கடைகள், டாஸ்மாக் மதுபான கூடங்கள் மற்றும் தனியார் மதுபான கூடங்கள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆயுதபூஜை, தொடர் விடுமுறை - கோவையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல கூடுதலாக 40 பேருந்துகள் இயக்கம்

மேலும், கள்ளச்சந்தையில் மது விற்கவும், வாங்கவும் கூடாது என்று போலீசார் சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இறைச்சி கடைகளுக்கும் தடை: 

கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காந்தி ஜெயந்தி  கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் தமிழக அரசால் ஆடு, மாடு மற்றும் கோழிகளை வதை செய்வதும், இறைச்சிகளை விற்பனை செய்வதும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே, கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி மற்றும் பன்றி இறைச்சி கடைகளை மூடும்படி இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அன்றைய தினம் கோவை மாநகராட்சியால் செயல்படுத்தப்பட்டு வரும் உக்கடம், சக்தி ரோடு, போத்தனூர் அறுவைமனைகள் மற்றும் துடியலூர் மாநகராட்சி இறைச்சி கடைகள் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Coimbatore, Local News