Home /coimbatore /

கோவையில் 130 பேருக்கு புதிதாக கொரோனா-984 பேருக்கு சிகிச்சை

கோவையில் 130 பேருக்கு புதிதாக கொரோனா-984 பேருக்கு சிகிச்சை

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36, 584 ஆக அதிகரித்துள்ளது.

    கோவை மாவட்டத்தில் நேற்று மட்டும் 130 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

    கொரேனா நோய் பாதிப்பு குறையவும் துவங்கியது. இருப்பினும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக் கவசம் அணிதல், சானிடைசர் பயன்படுத்துதல் தொடர்ந்து பின்பற்றப்பட்டுவந்தது.  தற்போது, தமிழகத்தில் ஆங்காங்கே கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து காணப்படுகிறது.

    கோவை மாவட்டத்தை பொறுத்த வரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,36,584 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று சிகிச்சைக்கு வந்த 163 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    மாவட்டத்தில் இதுவரை 3,32,982 போ் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 984 போ் சிகிச்சையில் உள்ளனா்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Coimbatore, Corona

    அடுத்த செய்தி