ஹோம் /கோயம்புத்தூர் /

ஒரே நேரத்தில் 11 பேரின் 11 உலக சாதனைகள்.. கோவையில் வியக்க வைத்த சாதனைநிகழ்வு..

ஒரே நேரத்தில் 11 பேரின் 11 உலக சாதனைகள்.. கோவையில் வியக்க வைத்த சாதனைநிகழ்வு..

கோவை

கோவை

Coimbatore Latest News | கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள அன்வேஷனா கிட்ஸ் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என 11 பேர் 91 என்ற எண்ணை இலக்காக வைத்து தனித்தனியாக வெவ்வேறு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Coimbatore | Coimbatore

முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாமின் 91வது பிறந்தநாளை முன்னிட்டு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 11 பேர் 91 என்ற எண்ணை இலக்காக வைத்து பல்வேறு உலக சாதனைகளை நிகழ்த்தி அசத்தியுள்ளனர்.

அறிவியல் விஞ்ஞானியும், முன்னாள் குடியரசுத் தலைவருமான அப்துல்கலாமின் பிறந்தநாள் உலக மாணவர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

அந்த வகையில் அப்துல் கலாமின் 91வது பிறந்தநாள் வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கோவை கீரணத்தம் பகுதியில் உள்ள அன்வேஷனா கிட்ஸ் பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர் முதல் பெரியவர்கள் வரை என 11 பேர் 91 என்ற எண்ணை இலக்காக வைத்து தனித்தனியாக வெவ்வேறு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

மேலும் படிக்க:  திருச்சி பொன்மலையில் உருவாக்கப்பட்ட ஊட்டி மலைப்பாதை ரயில் என்ஜின் - சிறப்புகள் என்ன?

இதில் 2 வயது முதல் 28 வயதுக்குப்பட்டோர் 91 நிமிடங்கள் 91 வினாடிகளில் இசையமைப்பது, பாடுவது,சைக்கிள் ஓட்டுவது, சிலம்பம் சுற்றுவது 91 நாட்டு கொடிகள், கார்கள், பறவைகள் உள்ளிட்டவை அடையாளம் காண்பது என பல்வேறு உலக சாதனையை நிகழ்த்தினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இவர்களது இந்த சாதனை சர்வதேச யுனைடெட் கலாம் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் அங்கீகரித்து 11 பேருக்கும் உலக சாதனையாளர்கள் விருதுகளை வழங்கியது.

Published by:Arun
First published:

Tags: Coimbatore, Local News