முகப்பு /கோயம்புத்தூர் /

"எக்ஸாம் முடிஞ்சிடுச்சு" சட்டையில் மை அடித்து விளையாடிய கோவை மாணவர்கள்!

"எக்ஸாம் முடிஞ்சிடுச்சு" சட்டையில் மை அடித்து விளையாடிய கோவை மாணவர்கள்!

X
கோவை

கோவை பள்ளி மாணவர்கள்

Coimbatore School students | கோவையில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்து பள்ளியில் இருந்து வெளியே வந்த மாணவர்கள் கோடை விடுமுறையை கொண்டாடும் விதமாக ஒருவருக்கு ஒருவர் ஆடைகளில் பேனா மையை தெளித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

  • Last Updated :
  • Coimbatore, India

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த பொதுத் தேர்வினை தமிழகம், புதுச்சேரியில் அமைக்கப்பட்டுள்ள 9 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் எழுதினர்.

இதனிடையே 10ம் வகுப்பு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் தேர்வை வெற்றிகரமாக எழுதி முடித்த மகிழ்ச்சியுடன் மாணவ மாணவிகள் வெளியே வந்தனர். ஒருபுறம் விடுமுறைக்கான திட்டங்கள் மறுபுறம் நண்பர்களை நீண்ட நாள் பிரிந்திருக்க வேண்டிய நிலை என்று வெளியே வந்த மாணவர்கள் ஒருவருக்கு ஒருவர் மாணவ பருவத்திற்கே உரிய தோணியில் தங்களது அன்பை பரிமாறிக்கொண்டனர்.

இதையும் படிங்க | கோவை நாயக்கன்பாளையம் அரசு பள்ளியில் கம்ப்யூட்டர் சென்டர் அமைத்து கொடுத்த தனியார் நிறுவனம்..

மாணவர்கள் ஒருவரது ஆடையில் மற்றொருவர் பேனா மையை தெளித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். எழுதிய தேர்வுகளிலேயே அறிவியல் தேர்வு மட்டும் தான் சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் தெரிவித்தனர்

top videos
    First published:

    Tags: Coimbatore, Local News, School students