முகப்பு /கோயம்புத்தூர் /

கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு..! 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்திய கைதிகள்..!

கோவை சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு..! 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்திய கைதிகள்..!

மாதிரி படம்

மாதிரி படம்

Kovai Central Jail : கோவை மத்திய சிறையில் இருந்தபடி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து அசத்தியுள்ளனர்.

  • Last Updated :
  • Coimbatore, India

கோயம்புத்தூர் சிறையில் இருந்தபடியே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று அசத்தியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி 20ம் தேதி வரை நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 526 பள்ளிகளை சேர்ந்த 20 ஆயிரத்து 81 மாணவர்கள், 20 ஆயிரத்து 175 மாணவிகள் என மொத்தம் 40 ஆயிரத்து 256 பேர் இந்த தேர்வை எழுதினர்.

கோவை சிறை

இந்த நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன இதில் கோவை மாவட்டத்தில் தேர்வு எழுதிய 40 ஆயிரத்து 256 மாணவ, மாணவிகளில் 18 ஆயிரத்து 221 மாணவர்கள், 19 ஆயிரத்து 416 மாணவியர் என மொத்தம் 37 ஆயிரத்து 637 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 93.49 ஆகும். இது கடந்த ஆண்டை விட 1.11 சதவீதம் அதிகம்.

இதில், பல்வேறு குற்ற செயல்களுக்காக கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் 47 பேர் 10ம் வகுப்பு தேர்வு எழுதினர். 45 ஆண்கள், 2 பெண்கள் பொதுத் தேர்வு எழுதிய நிலையில் அனைவருமே தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய கைதிகளில் ஒருவர் அதிகபட்சமாக 327 மதிப்பெண்கள் பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Coimbatore, Local News