முகப்பு /செய்தி /சென்னை / சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..

சிகிச்சைக்கு வந்த பெண்ணுடன் உல்லாசம்.. அந்தரங்க வீடியோவை வெளியிடுவேன் என மிரட்டிய டாக்டர் மீது வழக்கு..

மருத்துவர் சபரிமோகன்

மருத்துவர் சபரிமோகன்

புகாருக்கு ஆளான மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

சென்னையில் இளம்பெண் ஒருவருடன் பழகி திருமணம் ஆசை காட்டி மோசடி செய்த மருத்துவர் ஒருவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

சென்னை எண்ணூரைச் சேர்ந்த 28 வயது பட்டதாரி பெண்ணுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிகிச்சைக்காக சென்ற போது இளம்பெண்ணுக்கு அந்த மருத்துவருடன் பழக்கம் ஏற்பட்ட நிலையில், நாளாடைவில் இருவரும் நெருங்கி பழகத் தொடங்கியுள்ளனர்.

தொடர்ச்சியாக இருவரும் வாட்ஸ்ஆப் மூலம் சாட்டிங், வீடியோ கால், வெளியே லாங் டிரைவ் சென்று வந்த  நிலையில் இந்த உறவு காதலாக மாறியுள்ளது. அந்த இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக உறுதி மொழி கொடுத்த மருத்துவர் நெருக்கமாக இருக்கத் தொடங்கியுள்ளார்.

இந்நிலையில், சமீப காலமாக பெண்ணிடம் பேசுவதை அந்த மருத்துவர் திடீரென நிறுத்திய நிலையில் பெண்ணுக்கு சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் பெண் விசாரித்ததில் அந்த மருத்துவர் உறவை தொடர நாட்டம் காட்டவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் மருத்துவருக்கு தொடர்ந்து அழுத்தம் தந்துள்ளார். அப்போது அந்த மருத்துவர் தன்னிடம் நெருக்கமாக இருந்த அந்தரங்க புகைப்படங்கள் உள்ளன, அதை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் என  பிளாக்மெயில் செய்துள்ளார்.

விவகாரம் எல்லை மீறி போகவே அந்த பெண் தனது பெற்றோரிடம் இதை கூறியுள்ளார். அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதற்குள்ளாக அந்த மருத்துவர் வேறு ஒரு பெண் மருத்துவரை திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த இளம் பெண் தன்னிடம் இருந்த வாட்ஸ் ஆப் உரையாடல்கள், ஆடியோ ஆதாரங்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை போலீசாரிடம் ஆதராமாக தந்துள்ளார்.

இதையும் படிங்க: “தாலி கட்டி என்னிடம் ரூ.3.5 லட்சம் மோசடி செய்தார்...”- இளைஞர் மீது ஆண் நண்பர் பரபரப்பு புகார்...!

தன்மீது பழிவந்துவிடக் கூடாது என போலீஸ் விசாரணையை முடக்க மருத்துவர் முயற்சிப்பதாகவும், அதற்காக இதுவரை சுமார் 10 லட்சம் ரூபாய் செலவழித்துள்ளதாகவும் பெண்ணின் தரப்பினர் புகார் தெரிவித்துள்ளனர். பெண்ணின் புகாரை தொடர்ந்து மருத்துவர் மீது மோசடி, ஏமாற்றுதல், மிரட்டுதல், தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறது.

First published:

Tags: Cheating case, Chennai, Crime News, Doctor, Lovers