இலங்கை தமிழரான சியாமளா, பிரான்ஸ் நாட்டில் குடிப்பெயர்ந்து வசித்து வருகிறார். சினிமா மீது ஆர்வம் கொண்ட தொழிலதிபரான சியாமளா, அறம் பட இயக்குனரும், விசிக பிரமுகருமான கோபி நயினார் மீது நேற்று முன் தினம் காவல் ஆணையர் அலுவலகத்தில் மோசடி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்த புகாரில், கடந்த 2018ஆம் ஆண்டு சினிமா நட்பு வட்டாரங்கள் மூலமாக ஆக்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பாளர் விஜய் அமிர்த ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அப்போது தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் இயக்குனர் கோபி நயினார் இயக்கத்தில் நடிகர் ஜெய்யை வைத்து கருப்பர் நகரம் என்ற திரைப்படத்தை தயாரித்து வருவதாகவும், அந்த படத்திற்கு இணைந்து தயாரிப்பாளராக செயல்படுமாறு கூறியதாக சியாமளா தெரிவித்துள்ளார்.
ஆனால் அதற்கு ஒப்புக்கொள்ளாத சியாமளா, இயக்குனர் கோபி நாயினாரை சந்தித்து விசாரிக்கும் போது விஜய் அமிர்தராஜுடன் இணைந்து படம் தயாரிக்கலாம் என வாக்குறுதி அளித்ததாகவும் அதற்கு பிறகு ஒப்புக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து கடந்த 2018ஆம் ஆண்டு கருப்பர் நகரம் என்ற திரைப்படத்திற்காக மொத்தம் 30 லட்சம் ரூபாயை விஜய் அமிர்தராஜிடம் கொடுத்துள்ளார். பின்னர் திரைப்படத்திற்கான பூஜை மற்றும் மூன்று நாட்கள் ஜெய்யை வைத்து கோபி நாயினார் படத்தை இயக்கிய இடத்திற்கு சென்றதாகவும், மேலும் 6 மாதத்தில் படத்தை முடித்துவிடலாம் எனவும் படத்தின் லாபத்தில் 25 சதவீதம் தருவதாகவும் ஒப்பந்தம் போடப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த படத்தை எடுக்காமல், விஜய் அமிர்தராஜ் மற்றும் கோபி நாயனார் ஆகியோர் தன்னுடைய பணத்தை மோசடி செய்துள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதற்கு பதில் அளிக்கும் வகையில், இயக்குனர் கோபி நாயனார் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தான் கருப்பர் படத்தின் இயக்குனர் மட்டும் தான் என்றும், தயாரிப்பாளர் விஜய் அமிர்தராஜ் அலுவலகத்தில் தான் சியாமளாவை சந்தித்தேன் என கூறினார்.
மேலும் இலங்கை தமிழர் என்பதால் சியாமளாவிடம் பேசியிருக்கிறேன் என்றும், கருப்பர் நகரம் படத்திற்கு முதலீடு செய்வது தொடர்பாக எந்தவித உரையாடலும் நடக்கவில்லை என தெரிவித்தார். இந்த படம் சில காரணங்களால் திடீரென நின்றது. 3 தயாரிப்பாளர்கள் படத்தை திரும்பி எடுக்க முயற்சித்தனர். ஆனால் அந்த படம் நின்றுபோனது என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே பண வரவு செலவு ஆகியவை தெரியும் என்றும், தேவையில்லாமல் தன் மீது சியாமளா புகார் அளித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இலங்கை தமிழர் என்பதால் நட்பின் அடிப்படையில் மட்டுமே அவர் பேச வரும்போது பேசியதாகவும், வேண்டுமென்றே தன் பெயரைக் கெடுக்கும் வகையில் தான் கையெழுத்திடாத ஒப்பந்தத்தை காட்டி பொய்யாக புகார் அளித்துள்ளார் என தெரிவித்தார்.
மேலும் 30 லட்சம் பணம் கொடுத்ததற்காக போடப்பட்ட ஒப்பந்தத்தில் இருப்பது தன்னுடைய கையெழுத்து இல்லை எனவும், போலி ஆவணங்கள் மூலம் பொய்யான புகார் அளித்த சியாமளா மீது நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருப்பதாகவும் கோபி நாயனார் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Crime News