முகப்பு /செய்தி /சென்னை / சென்னைவாசிகள் கவனத்துக்கு..! மார்ச் 18-ம் தேதி இந்த 7 இடங்களில் குடிநீர் விநியோகம் ரத்து

சென்னைவாசிகள் கவனத்துக்கு..! மார்ச் 18-ம் தேதி இந்த 7 இடங்களில் குடிநீர் விநியோகம் ரத்து

மாதிரி படம்

மாதிரி படம்

சென்னை குடிநீர் வாரியம் மூலம் ராமாபுரம் விரிவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்புப் பணி நடைபெறுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras], India

நீர்த்தேக்கத்தொட்டி பராமரிப்புப் பணி காரணமாக மார்ச் 18-ஆம் தேதி கோடம்பாக்கம், வளசரவாக்கம், அம்பத்தூர் உள்ளிட்ட 7 பகுதிளில் குடிநீர் விதியோகம் நிறுத்தப்படஉள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் வாரியம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை குடிநீர் வாரியம் மூலம் ராமாபுரம் விரிவான குடி நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் குறிஞ்சி நகர் கீழ்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. அதற்காக நீர்த் தேக்க தொட்டியின் 700 மி.மீ. அளவு கொண்ட உந்து குழாயுடன் மவுண்ட்- பூந்தமல்லி சாலையில் உள்ள (சாந்தி காலனி மற்றும் டி.எல்.எப் சந்திப்பில்) 1500மி.மீ. அளவு கொண்ட பிரதான குழாயை இணைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனால் மார்ச் 18-ஆம் தேதி காலை முதல் மார்ச் 19-ஆம் தேதி காலை 6 மணி வரை அம்பத்தூர், அண்ணாநகர். தேனாம்பேட்டை, கோடம்பாக்கம் வளசரவாக்கம் ஆலந்தூர், அடையார். உள்ளிட்ட பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். பொதுமக்கள் தங்களுக்குவேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளலாம்.

மேலும் லாரிகள் மூலம் தேவையான குடிநீரை பெற்றுக் கொள்ள வாரியத்தின் https://chennaimetrowater.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகளுக்கு லாரிகள் மூலம் எந்த வித தடையும் இன்றி சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யபடும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Chennai, Drinking water, Local News