சென்னை ரயில் நிலையத்தில் புறப்பட தயாரான ரயிலின் நான்கு பெட்டிகள் தனியாக கழண்டு சென்றது.
சென்னையில் இன்று காலை 5:35 மணிக்கு கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் நின்றது. 5:55 மணியளவில் ரயில் புறப்பட ஆயத்தமான போது நான்கு பெட்டிகள் மட்டும் தனியாக பின்னோக்கி கழண்டு சென்றுள்ளது.
இதனை அறியாத ரயில் லோகோ பைலட் ரயிலை இயக்கியுள்ளார். சுமார் 50 மீட்டர் தூரம் சென்றதும் ரயில் இணைப்பில் நான்கு பெட்டிகள் இல்லாததை அறிந்த லோகோ பைலட் ரயிலை நிறுத்தியுள்ளார்.
ரயில் இரண்டு பகுதிகளாக பிரிந்து செல்வதை அறிந்த பயணிகள் ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்து விட்டது என நினைத்து அலறடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சைதாபேட்டை ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில்வே ஊழியர்கள் நிலைமையை எடுத்துக் கூற பயணிகள் சற்று நிம்மதியாகினார்.
தற்போது கழன்று சென்ற நான்கு பெட்டிகளை ரயிலுடன் இணைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக இந்த தடத்தில் மின்சார ரயில் சேவையானது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு செல்வோர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
செய்தியாளர்: அன்பரசன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Chennai, Electric Train, Saidapet, Tamil News