முகப்பு /செய்தி /சென்னை / வாகன ஓட்டிகளே உஷார்... சென்னை மெட்ரோ பணிகளுக்காக முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

வாகன ஓட்டிகளே உஷார்... சென்னை மெட்ரோ பணிகளுக்காக முக்கிய பகுதியில் போக்குவரத்து மாற்றம்!

கோடம்பாக்கம் மேம்பாலம்

கோடம்பாக்கம் மேம்பாலம்

Chennai Traffic Change | மெட்ரோ பணிக்காக ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

  • Last Updated :
  • Chennai, India

சென்னை கோடம்பாக்கத்தில் மெட்ரோ பணிகளுக்காக இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் சேவைக்காக 3 வழித்தடங்களில்  பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோடம்பாக்கத்தில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆற்காடு சாலை- யுனெடெட் இந்தியா காலனி 1வது சந்திப்பு வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் திமுக ஆட்சி! - மு.க.ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன?

கோடம்பாக்கம் மேம்பாலத்திலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் மற்றும் மாநகர பஸ்கள் நேராக டாக்டர் அம்பேத்கர் சாலைக்கு ஆற்காடு சாலை வழியாக செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. 
ஆற்காடு சாலை சந்திப்பு முதல் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பு வரை ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வடபழனியிலிருந்து கோடம்பாக்கம் நோக்கி செல்லும் வாகனங்களுக்கு வழக்கம்போல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
டாக்டர் அம்பேத்கர் சாலையில் ஒரு வழி பாதை ஆற்காடு சாலை சந்திப்பில் இருந்து 2-வது அவென்யூ வரை உள்ளதால் மேற்கண்ட சாலையில் ரத்தினம்மாள் தெரு சந்திப்பில் இருந்து ஆற்காடு சாலை சந்திப்பு வரை இருவழி பாதையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகுரக வாகனங்கள் ஸ்டேஷன் வியூ சாலை சந்திப்பில் இருந்து நேராக ஆற்காடு சாலைக்கு செல்ல தடை
விஸ்வநாதபுரம் பிரதான சாலையில் இருந்து வரும் இலகு ரக வாகனங்கள் தியாகராயநகர் செல்ல ஸ்டேஷன் வியூ சாலை, பசுல்லா மேம்பாலம் வழியாக செல்ல அறிவுறுத்தல்
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று முதல் ம 12-ம் தேதி வரை ஒரு வார காலத்துக்கு சோதனை அடிப்படையில் ஆற்காடு சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து தெரிவித்துள்ளது.
First published:

Tags: Chennai, Chennai Traffic